“ட்வீட்டை ஒழுங்கா பாத்தியாடா?”.... ஒருமையில் திட்டிய சூர்யா ரசிகரை தனது பாணியிலேயே டீல் செய்த சரத்குமார்...!
சூர்யா ரசிகர் ஒருவர், சரத்குமாரை பார்த்து “சூர்யா ட்விட்டரில் உள்ளார். அவரை டேக் செய்து போடுடா” என்று மிகவும் தரம் தாழ்ந்த நிலையில் ஒருமையில் பதிவிட்டிருந்தார்.
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவர் சரத் குமார். வெள்ளி விழா நாயகன் என புகழும் அளவிற்கு சரத்குமார் நடித்த சூர்யவம்சம், நாட்டாமை, நட்புக்காக ஆகிய படங்கள் வெற்றி விழா கொண்டாடியுள்ளன. தற்போது 65 வயதாகும் சரத்குமார், இந்த வயசிலும் டாப் ஹீரோக்கள் பார்த்து பொறாமைப்படும் அளவிற்கு தனது உடலை கட்டுக்கோப்பாக பராமரித்து வருகிறார். அரசியல், சினிமா என இரண்டு குதிரைகளிலும் வெற்றிகரமாக பயணம் செய்து வரும் சரத்குமார், சமூக வலைத்தளங்களிலும் படுஆக்டிவாக இருக்கிறார். சமீபத்தில் சரத்குமார்.“பொன்மகள் வந்தாள்” திரைப்படம் குறித்து பதிவிட்ட ட்வீட், நெட்டிசன்களுக்கும், அவருக்கும் இடையே பிரச்சனைகளை கிளப்பிவிட்டுள்ளது.
இதையும் படிங்க: “இதுக்கு புடவையே கட்டியிருக்க வேண்டாம்”...சாக்ஷி அகர்வாலின் அதிரடி கவர்ச்சியை பார்த்து கடுப்பான நெட்டிசன்கள்!
சூர்யாவின் 2டி எண்டெர்டெயின்மெண்ட் சார்பில் ஜோதிகா நடித்துள்ள திரைப்படம் “பொன்மகள் வந்தாள்”. அறிமுக இயக்குநர் ஜே.ஜே.பெட்ரிக் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் ஒடிடி தளமான அமேசான் பிரைமில் ரிலீஸ் ஆகும் முதல் தமிழ்த் திரைப்படம் என்ற பெருமையை பெற்றது. இப்படத்தில் ஜோதிகா முதல் முறையாக வழக்கறிஞர் வேடத்தில் நடித்திருப்பதோடு, பாக்யராஜ், பிரதாப் போத்தன், பார்த்திபன், தியாகராஜன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இதையும் படிங்க: லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் படுமோசமான வீக்னஸ்... வெளிச்சத்திற்கு வந்த விவகாரம்...!
மே 29ம் தேதி அமேசான் பிரைமில் “பொன்மகள் வந்தாள்” திரைப்படம் வெளியாவதற்கு முதல் நாளே திரைத்துறை பிரபலங்கள் பலரும் அந்த படத்தை கண்டுகளித்தனர். இயக்குநர் பாரதிராஜா, சரத்குமார், நடிகை ராதிகா, சில்லுக்கருப்பட்டி இயக்குநர் ஹலீதா உட்பட திரைத்துறையைச் சேர்ந்த பலரும் தங்களது ட்விட்டர் பக்கத்தில் ஜோதிகா மற்றும் பொன்மகள் வந்தாள் படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்திருந்தனர்.
இந்த படத்தை புகழ்ந்து நடிகர் சரத்குமாரும், “இது மிகச்சிறந்த படம், இயக்குனர் பெட்ரிக் நன்றாக வடிவமைத்துள்ளார் படக்குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள் பெருமைகள் அனைத்தும் உங்களையே சேரும்” என்று பதிவிட்டிருந்தார். ஆங்கிலத்தில் பதிவிட்ட சரத்குமாரை பார்த்து நெட்டிசன்களில் ஒருவர், “யா௫க்கு வாழ்த்து சொல்றீங்க யார் இதை பார்த்து உங்களுக்கு ஓட்டு போட போற தயவு செய்து தமிழில் பதிவு போடுங்க..அப்போ ஏன் ஆங்கிலயேரை விரட்டி அடித்தீர்கள் தமிழை நீங்களே பேசலான்னா பின்ன யா௫ பேசுவா?” என்று கேள்வி எழுப்பினார். அதற்கு தன்மையாக “கண்டிப்பாக சகோதாரா” என சரத்குமார் பதிலளித்திருந்தார்.
இதையும் படிங்க: 14 வயதில் நடந்த “அந்த” சம்பவம்... பிரபல நடிகையை முற்றிலும் மாற்றிய விஷயம் குறித்து அவரே சொன்ன தகவல்....!
சூர்யா ரசிகர் ஒருவர், சரத்குமாரை பார்த்து “சூர்யா ட்விட்டரில் உள்ளார். அவரை டேக் செய்து போடுடா” என்று மிகவும் தரம் தாழ்ந்த நிலையில் ஒருமையில் பதிவிட்டிருந்தார். அதைப்பார்த்து கடுப்பான சரத்குமார் அவர் பாணியிலேயே "ட்வீட்டை ஒழுங்காக பாத்தியாடா" என்று ஒருமையில் பதில் கேள்வி எழுப்ப அந்த நபர் சத்தம் போடாமல் ஓட்டம் எடுத்துவிட்டார் போல் தெரிகிறது.