மலையாளம் மற்றும் கன்னட படங்களில் நடித்து வந்த ஷ்ரத்தா ஸ்ரீநாத், கெளதம் கார்த்திக்கு ஜோடியாக இவன் தந்திரன் படம் மூலம் தமிழில் அறிமுகமானார்.  அதன் பின்னர் விஜய் சேதுபதி, மாதவன் நடிப்பில் வெளியான ''விக்ரம் வேதா'' திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இந்த படத்தில் 'யாஞ்சி, யாஞ்சி' பாடலில் மாதவன், ஷ்ரத்தா இடையேயான ரொமான்ஸ் இளசுகளை சுண்டி இழுத்தது. 

இதையும் படிங்க: குஷ்புவின் நெருங்கிய உறவினர் கொரோனாவிற்கு பலி.... அதிர்ச்சியில் திரையுலகம்...!


இதையடுத்து டோலிவுட் பக்கம் கவனத்தை செலுத்தி வந்த ஷ்ரத்தா, தல அஜித்தின் ''நேர்கொண்ட பார்வை'' படத்தில் துணிச்சலான மார்டன் பெண்ணாக நடித்து தமிழக ரசிகர்களின் கவனம் ஈர்த்தார். அதே சமயம், தெலுங்கில் அவர் நடித்த 'ஐர்சி' படம் சூப்பர் ஹிட்டடித்தால் அங்கும் அவருக்கு மார்க்கெட் கூடியுள்ளது.சினிமாவில் பெரிய அளவிற்கு கிளாமர் காட்டாவிட்டாலும், அவ்வப்போது சோசியல் மீடியாவில் கவர்ச்சி காட்டி வருகிறார். தற்போது லாக்டவுனால் கர்நாடகாவில் உள்ள வீட்டில் அம்மாவுடன் வசித்து வருகிறார். 

இதையும் படிங்க: லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் படுமோசமான வீக்னஸ்... வெளிச்சத்திற்கு வந்த விவகாரம்...!

தற்போது விஷாலுடன் சக்ரா, மாதவனுடன் மாறா ஆகிய படங்களில் நடித்து ஒப்பந்தமாகியுள்ளார். கொரோனா பிரச்சனையால் வீட்டிற்குள் முடங்கியுள்ள பிரபலங்கள் பலரும் விதவிதமான சவால்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகின்றனர். அப்படி சமீபத்தில் யுனிசெப் அமைப்பின் #RedDotChallenge வைரலாகி வருகிறது. அந்த சவாலை ஏற்பவர்கள் தங்களது உள்ளங்கையில் ஒரு சிவப்பு புள்ளியுடன் புகைப்படம் எடுத்து, அத்துடன் தங்களது மாதவிடாய் குறித்த அனுபவத்தையும் பகிர வேண்டும். அதன்படி ஷ்ரத்தா ஸ்ரீநாத் தனது வாழ்நாளில் நிகழ்ந்த மறக்கமுடியாத மாதவிடாய் அனுபவம் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

இதையும் படிங்க: “இதுக்கு புடவையே கட்டியிருக்க வேண்டாம்”...சாக்‌ஷி அகர்வாலின் அதிரடி கவர்ச்சியை பார்த்து கடுப்பான நெட்டிசன்கள்!

எனக்கு அப்போது 14 வயது, எங்களுடைய குடும்ப பூஜை ஒன்றில் பங்கேற்றிருந்தேன்.எனக்கு அன்று மாதவிடாய் வந்திருந்தது. அன்று என் அம்மா உடன் வரவில்லை. அதனால் என் பக்கத்தில் அமர்ந்திருந்த ஆன்ட்டி ஒருவரிடம் கவலையுடன் சொன்னேன். ஏனென்றால் நான் அன்று நாப்கின் எடுத்துச் செல்லவில்லை. நான் அந்த ஆன்ட்டியிடம் கவலையுடன் பேசிக்கொண்டிருந்ததைக் கேட்ட ஒரு நல்ல மனுஷி, பரவாயில்லை குழந்தை(மாதவிடாய் உடன் பூஜையில் பங்கேற்றதற்காக) கடவுள் உன்னை மன்னிப்பார் என்றார். அன்று தான் நான் பெண்ணியவாதியாக மாறினேன். அன்று எனக்கு 14 வயது என்று குறிப்பிட்டுள்ளார்.