வெற்றிமாறன் தனுஷ் கூட்டணியில் படப்பிடிப்பு துவங்கியிருக்கும் ‘அசுரன்’ படத்துக்கு நடிகர்கள் மற்றும் தொழில் நுட்பக்கலைஞர்கள் ஒவ்வொருவராகக் கமிட் பண்ணப்பட்டுவரும் நிலையில் படத்தின் இசையமைப்பாளராக யாரை நியமிப்பது என்பது குறித்து சிறு குழப்பம் நிலவி வருவதாக தகவல்கள் வருகின்றன


வெற்றிமாறன் தனுஷ் கூட்டணியில் படப்பிடிப்பு துவங்கியிருக்கும் ‘அசுரன்’ படத்துக்கு நடிகர்கள் மற்றும் தொழில் நுட்பக்கலைஞர்கள் ஒவ்வொருவராகக் கமிட் பண்ணப்பட்டுவரும் நிலையில் படத்தின் இசையமைப்பாளராக யாரை நியமிப்பது என்பது குறித்து சிறு குழப்பம் நிலவி வருவதாக தகவல்கள் வருகின்றன. இப்படத்தின் முக்கிய பாத்திரத்தில் நடிக்க முன்னணி மலையாள நடிகை மஞ்சு வாரியர் நேற்றுதான் கமிட் ஆனார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்நிலையில், படத்தின் இசையமைப்பாளர் யார் என்று முடிவு செய்யும் பணி துவங்கியிருப்பதாக தெரிகிறது. ’வட சென்னை’ தவிர்த்து வெற்றிமாறன் இயக்கியுள்ள மற்ற மூன்று படங்களுக்கும் இசையமைத்தவர் ஜீ.வி.பிரகாஷ். ஆனால் அவர் தற்போது நடிகராக மிக பிசியாக ஒரே நேரத்தில் பல படங்களில் நடித்துக்கொண்டிருப்பதால் அவரை ஒப்பந்தம் செய்ய வெற்றிமாறன் மிகவும் யோசிப்பதாகத் தெரிகிறது.

அதே சமயம் ‘மாரி2’ தொடங்கி தனுஷுடன் தொடர்ந்து கூட்டணி அமைத்துவரும் யுவன் ஷங்கர் ராஜா ஏகப்பட்ட ஹிட் பாடல்கலைக் கொடுத்துவருகிறார். அதிலும் ‘மாரி2’ ரவுடி பேபி பாடல் யுடுபில் உலக ட்ரெண்டிங்கில் சாதனையைப் படைத்துள்ளது. தனுஷின் சாய்ஸும் யுவன் ஷங்கர் ராஜாதான் என்பதால் ஜீ.வியை விட யுவனுக்கே அதிக வாய்ப்பு இருப்பதாகத் தெரிகிறது.