Asianet News TamilAsianet News Tamil

Yuvan Shankar Raja: ரியோ ராஜின் ‘ஜோ’ படத்தில் ஸ்பெஷல் அப்பியேரன்ஸ் கொடுக்கும் யுவன் ஷங்கர் ராஜா!

ரியோ ராஜின் ‘ஜோ’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘ஒரே கனா’ பாடலில் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா ஸ்பெஷல் அப்பியேரன்ஸ் கொடுத்து அதகளப்படுத்தியுள்ளார். இதுகுறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
 

Yuvan Shankar Raja special appearance in Rio Raj joe movie mma
Author
First Published Nov 7, 2023, 4:57 PM IST | Last Updated Nov 7, 2023, 4:57 PM IST

ரியோ ராஜ் நடித்துள்ள ’ஜோ’ திரைப்படம் தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான வைப்பை உருவாக்கி வருகிறது. வண்ணமயமான மற்றும் நேர்த்தியாக வழங்கப்பட்ட இதன் விஷூவல் புரோமோவான 'உருகி உருகி' என்ற டிராக் அனைவரையும் 'ஜோ'வின் உலகிற்குள் அழைத்து சென்றது. படத்திற்கான புரோமோஷனல் பாடலாக மியூசிக்கல் ஜீனியஸ் யுவன் ஷங்கர் ராஜா திரையில் தோன்றும் பாடல் குறித்தான அறிவிப்பை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இந்த தகவல் நவம்பர் 24ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பை இது கூட்டுவதாக அமைந்துள்ளது. இன்னொரு இசையமைப்பாளர் பாடலில் யுவன் ஷங்கர் ராஜா தோன்றுவது இதுவே முதல்முறை. அஜித் குமாரின் ’துணிவு’ படத்தில் ‘சில்லா சில்லா’ என்ற சார்ட் பஸ்டர் ஹிட் பாடலை எழுதிய வைசாக் இந்த ‘ஒரே கனா’ பாடலை எழுதியுள்ளார். 'அடிபொலி' என்ற இண்டி பாடல், ’பேச்சுலர்’ படத்தில் இருந்து 'அடியே' மற்றும் இந்த படத்தில் இருந்து 'உருகி உருகி' போன்ற பெப்பி பாடல்களை கொடுத்த சித்து குமார்தான் இந்த ‘ஒரே கனா’ பாடலுக்கு இசையமைத்துள்ளார். 

பிறந்தநாளுக்கு ராஜ விருந்து வைத்த கமல்ஹாசன்! நாவில் எச்சில் ஊறவைக்கும் எக்கச்சக்க ஐட்டம்ஸ்.. ஃபுல் மெனு இதோ!

Yuvan Shankar Raja special appearance in Rio Raj joe movie mma

யுவன் ஷங்கர் ராஜா போன்ற ஒரு மியூசிக்கல் லெஜெண்ட் தங்களது படத்தில் இருப்பது படத்தின் எதிர்ப்பார்ப்பையும் மதிப்பையும் உயர்த்தும் என்று ‘ஜோ’ படக்குழுவினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ‘ஜோ’ ஒரு ஃபீல்-குட் ரொமாண்டிக் என்டர்டெய்னர் திரைப்படம். இந்தப் படத்தை ஹரிஹரன் ராம்.எஸ் எழுதி இயக்கியுள்ளார் மற்றும் விஷன் சினிமா ஹவுஸின் டாக்டர். டி.அருளானந்து & மேத்வோ அருளானந்து தயாரித்துள்ளனர்.

ரெட் கார்டு கொடுத்து விசாரிக்காமல் வெளியேற்றிய கமல்! ஹேஷ் டேக்குடன் வாழ்த்து கூறி ஆண்டவரையே அதிரவிட்ட பிரதீப்!

இந்தப் படத்தில் ரியோ ராஜ் ஹீரோவாக நடிக்க, பவ்யா திரிகா ஹீரோயினாக நடித்துள்ளார்.  சித்து குமார் இசையமைக்க, ராகுல் கே.ஜி.விக்னேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். வருண் கே.ஜி. எடிட்டிங்பணிகளை மேற்கொண்டுள்ளார். மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ‘ஜோ’ திரைப்படம் உலகம் முழுவதும் நவம்பர் 24 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios