காஷ்மீர் படத்தை பார்த்த இளைஞர் ஒருவர் மன அழுத்தம் தாங்காமல் உயிரிழந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தீவிர இந்து மதவாதியான இவர் காஷ்மீர் பைல்ஸ்  குறித்து தனது நண்பர்களிடம் நீண்ட நேரம் விவாதம் செய்துள்ளார்.

மெகா ஹிட் அடித்த காஷ்மீர் பைல்ஸ் :

தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் 200 கோடி வசூலை கடந்து பிரமிக்க வைத்துள்ளது. பிரபல பாலிவூட் இயக்குனர், விவேக் அக்னிஹோத்ரி இயக்கத்தில், கேர், மிதுன் சக்ரவர்த்தி, பல்லவி ஜோஷி, தர்ஷன் குமார் ஆகியோரின் நடிப்பில் கடந்த 11 ம் தேதி வெளியானது ‘தி காஷ்மீர் பைல்ஸ்’.

கதை பின்னணி :

கடந்த 1980களின் பிற்பகுதி மற்றும் 90களின் முற்பகுதியில் நடந்த ஒரு துயர சம்பவம் தான் இது. காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருந்து அம்மாநில பண்டிட்டுகள் வெளியேற்றப்பட்ட நிகழ்வை கதை களமாக கொண்டு தி காஷ்மீர் பைல்ஸ் படம் உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு...மீண்டும் துவங்கும் தனுஷின் கனவுப்படம்.. தெலுங்கு சூப்பர் ஸ்டாரை இயக்கும் நம்ம ஊர் ஹீரோ..

பிரதமர் - முதல்வரின் வாழ்த்துக்கள் :

தி காஷ்மீர் ஃபைல்ஸ் படம் குறித்து பாராட்டியுள்ள பிரதமர் மோடி.. இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி உள்ளிட்ட படக்குழுவினரை நேரில் அழைத்து துணிச்சலுடன் இந்த படத்தை உருவாக்கியதற்கு பாராட்டு தெரிவித்திருந்தார். அதோடு பிரதமர் மோடியின் நேரடி பாராட்டால் “தி காஷ்மீர் ஃபைல்ஸ்” படத்தின் ரேட்டிங் எங்கையோ எகிறிடுச்சு. முன்னதாக மத்திய பிரதேச அரசு கேளிக்கை வரியை ரத்து செய்ததோடு காவல்துறைக்கு படம் பார்க்க விடுப்பும் கொடுத்தது. இதை தொடர்ந்து அசாம் அரசு அனைத்து ஊழியர்களுக்கு படம் பார்க்க அரை நாள் விடுமுறை அளித்து அசத்தியது.

எதிர் கட்சிகளின் புகார் :

படம் குறித்து பாஜக உள்ளிட்ட இந்து மதம் சார்ந்த கட்சிகள் பெருமிதம் தெரிவித்து வந்தாலும், உண்மைக்கு மாறாகப் படம் எடுக்கப்பட்டிருப்பதாக கூறி காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அதோடு இஸ்லாமியர்கள் காஷ்மீர் பண்டிட்டுகளைக் கொலை செய்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது பெரும் சர்சையை கிளப்பியுள்ளது. 

மேலும் செய்திகளுக்கு...Maamannan : முதல் கட்டத்தை முடித்த உதயநிதி..கேக் வெட்டி கொண்டாடிய வைரல் போட்டோஸ்..

இளைஞர் மூளைச்சாவு : 

இந்நிலையில் சமீபத்தில் காஸ்மீர் பைல்ஸ் படத்தை பார்த்த புனேவை சேர்ந்த இளைஞர் மூளைச்சாவு அடைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுவயதில் இருந்து இந்து மதம் மீது அதீத பற்று கொண்ட அபிஜித் என்னும் இளைஞர். மார்ச் 21 அன்று காஷ்மீர் பைல்ஸ் படத்தை பார்த்து விட்டு வீடு திரும்பினார். பின்னர் தனது நண்பர்களுடன் கிட்டத்தட்ட 1 மணி நேரம் தனது நண்பர்களுடன் ஆதங்கம் தெரிவித்துள்ளார். பின்னர் படுக்கைக்கு சென்ற அபிஜித் அடுத்த நாள் காலையில் தனது ரூமில் பிணமாக கிடர்ந்துள்ளார். பின்னர் அவரை ஆய்வு செய்த டாக்டர்கள் அபிஜித் மூளைச்சாவு அடைந்துள்ளதாகவும். இதற்கு மனஅழுத்தம் தான் காரணம் என கூறியுள்ளனர்.