Maamannan : முதல் கட்டத்தை முடித்த உதயநிதி..கேக் வெட்டி கொண்டாடிய வைரல் போட்டோஸ்..
உதயநிதி தற்போது இயக்குனர் மாரி செல்வராஜுடன் கைகோர்த்துள்ள மாமன்னனின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. அதற்கான கொண்டாட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

udhayanidhi
தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி, கடந்த 2008-ம் ஆண்டு தயாரிப்பாளராக அறிமுகமானார். வெகு விரைவில்தமிழ் சினிமாவின் முன்னை நாயகர்களான விஜய், சூர்யா, கமல் போன்றநடிகர்களை தனது ரெட் ஜெயண்ட் நிறுவனம் மூலம் தயாரித்து அசத்தினார்.
udhayanithi
பின்னர் நாயகன் அவதாரம் எடுக்க முடிவு செய்த உதயநிதி கடந்த 2012-ம் ஆண்டு ராஜேஷ் இயக்கத்தில் வெளியான ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். முதல் படத்திலேயே ரசிகர்களை ஈர்த்தார்.
maamannan
சமீபகாலமாக அரசியலில் பிஸியாக இருக்கும் உதயநிதி மீண்டும் சினிமாவில் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார். தற்போது இவர் கைவசம் கண்ணை நம்பாதே, நெஞ்சுக்கு நீதி, ஏஞ்சல் போன்ற படங்கள் உள்ளன. இவற்றை அடுத்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் படத்தில் நடித்து வருகிறார்.
maamannan
பரியேறும் பெருமாள், கர்ணன் போன்ற படங்கள் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த மாரி செல்வராஜ் இயக்கும் மாமன்னன் படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளார்.
மேலும் செய்திகளுக்கு...Anushka Shetty : மீண்டும் இணையும் பாகுபலி ஜோடி... பிரம்மாண்ட படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாகிறார் அனுஷ்கா?
maamannan
வித்யாசமான கதையம்சத்தை இதுவரை தமிழுக்கு தந்த இயக்குனரின் மாமன்னனில் நகைச்சுவை நடிகர் வடிவேலு காமெடியனாகவும், மலையாள நடிகர் பகத் பாசில் வில்லனாகவும் நடிக்க உள்ளதாக அறிவித்துள்ளனர்.
maamannan
உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரிக்கும் இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். அதோடு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்கிறார்.
maamannan
மாமன்னன் படத்திற்கு செல்வா ஆர்.கே படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளதாகவும் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் குறிப்பிட்டுள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
மேலும் செய்திகளுக்கு...கார்த்தி உடன் கைகோர்க்கும் 90 ஸ் கனவுக்கன்னி.. 16 வருடம் கழித்து ரீ-என்ட்ரி கொடுக்கும் க்யூட் நாயகி..
maamannan
உதயநிதி ஸ்டாலினின் மாமன்னன் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இது குறித்து கேக் வெட்டி கொண்டாடியுள்ள படக்குழுவினர் அந்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.