'சர்கார்' படத்தில் விஜய்யின் ஓட்டை, கள்ள ஓட்டாக போடும், கேரக்டரில் நடித்த யோகி பாபு, இரண்டே காட்சிகளில் வந்தாலும், குறு குறு பார்வை, எதார்த்தமான காமெடி பேச்சால்... ரசிகர்களை மட்டும் அல்ல தளபதி விஜய்யையும் கவர்ந்து விட்டார்.

இதனால் தற்போது தளபதி '63 ' ஆவது படத்திலும், வாய்ப்பு கொடுத்து, யோகி பாபுவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

தற்போது,  'தளபதி 63' படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா, நடிக்க உள்ளதாக உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து 'மதயானை கூட்டம்', 'விக்ரம் வேதா', 'பரியேறும் பெருமாள்' ஆகிய படங்களில் நடித்த கதிர்,  முக்கிய வேடத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளதாக தகவல் வெளியானது. 

அதே போல் பத்திரிக்கையாளர்கள் சங்கம், நலிந்த ஊழியர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கும் விழாவில் கலந்து கொண்ட நடிகர் ரோபோ ஷங்கர் தன்னுடைய மகள், அட்லீ இயக்கத்தில் உருவாக உள்ள தளபதி 63 படத்தில் நடிக்க உள்ளதாக தெறிவித்தார்.

தற்போது யோகிபாபு மீண்டும் விஜய்யுடன் 'தளபதி 63' படத்தில் இணையும் தகவலை ஏஜிஎஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ அர்ச்சனா கல்பாதி தனது சமூக வலைத்தள பக்கத்தில் உறுதி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.