Asianet News TamilAsianet News Tamil

'சன்னிதானம் PO' படப்பிடிப்பில் இணைந்த 'யோகிபாபு'..!

சபரிமலையில் நடைபெற்று வரும் யோகிபாபுவின் 'சன்னிதானம் PO' படப்பிடிப்பில் தற்போது யோகி பாபு இணைத்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
 

yogi babu join sannithanam po movie
Author
First Published Apr 19, 2023, 12:40 AM IST | Last Updated Apr 19, 2023, 12:40 AM IST

விவிகே என்டர்டெயின்மென்ட், சர்வதா சினி கேரேஜ் மற்றும் ஷிமோகா கிரியேஷன்ஸ் சார்பில் வி விவேகானந்தன், மதுசூதன் ராவ் மற்றும் ஷபீர் பதான் ஆகியோர் இணைந்து தமிழ் மற்றும் மலையாளம் மொழிகளில் தயாரித்து வரும் படம் 'சன்னிதானம் PO'. இந்தப்படத்தை  ராஜீவ் வைத்யா  இயக்குகிறார்.

நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாமல் தொடர்ந்து கதையின் நாயகனாகவும் வெற்றி பவனி வரும் யோகிபாபு  இந்தப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். மேலும் பிரபல நடிகர் சுரேஷ்கோபியின் மகன் கோகுல் சுரேஷ், வேலராமமூர்த்தி, பிரமோத் ஷெட்டி, மேனகா சுரேஷ், வினோத் சாகர், வர்ஷா விஸ்வநாத், மித்ரா குரியன் ஆகியோர் இந்தப்படத்தில் நடிக்கின்றனர்.

ஒரே படம்... சம்பள விஷயத்தில் நயன், சமந்தா, ராஷ்மிகாவை பின்னால் தள்ளிய மிருணாள் தாகூர்! மிரட்டுறாங்களே..!

yogi babu join sannithanam po movie

அதே போல் இதில் கன்னட நடிகர் அஸ்வின் ஹாசன் மற்றும் தமிழ் திரைப்பட குழந்தை நட்சத்திரம் ராக்ஸ் ஆகியோரும் ;நடிக்கிறார்கள் . இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த 15 நாட்களாக சபரிமலையில் நடைபெற்று வருகிறது . குறிப்பாக கடந்த சனிக்கிழமை முதல் யோகிபாபு நடிக்கும் காட்சிகள் இங்கே விறுவிறுப்பாக படமாக்கப்பட்டு வருகிறது. 

Shamlee: அஜித் மஞ்சினிக்கு உள்ள அபார திறமை.. சர்வதேச ஓவிய கண்காட்சியில் இடம்பெற்ற ஷாம்லியின் படைப்புகள்!

சபரிமலை சன்னிதானம், அங்கே பணிபுரியும் டோலி தூக்கும் பணியாளர்கள் மற்றும் சன்னிதானத்தில் அமைந்துள்ள போஸ்ட் ஆபீஸ் இவற்றை பின்னணியாக வைத்து இந்த படம் வருவதாக அறிவித்துள்ளனர்.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios