நடிகை யாஷிகா ஆனந்த், 'ரோஜா' சீரியலில் படு கவர்ச்சியான உடையில் தோன்றியுள்ள ப்ரோமோ தற்போது ரசிகர்களால் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

தமிழில், நடிகை யாஷிகா அறிமுகம் ஆனது 'கவலை வேண்டாம்' என்கிற படமாக இருந்தாலும், இவரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக்கியது 'இருட்டு அறையில் முரட்டு குத்து' திரைப்படம் தான். இந்த படத்தில் தோன்றும் கவர்ச்சி பேய்யான சந்திரிகா ரவிக்கே செம்ம டஃப் கொடுத்து நடித்திருப்பார் யாஷிகா.

இதை தொடர்ந்து, உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாமல் விளையாடினார். ஏற்கனவே வெளியில் காதலி உள்ள, மகத்தை காதலிப்பதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். பின்னர் ஒருவழியாக இருவரும் வெளியே வந்த பின் இந்த, விவகாரம் முடிவுக்கு வந்து... மீண்டும் பழைய காதலி பிராச்சியுடன் மகத்துக்கு திருமணமும் முடிந்தது.

மேலும் செய்திகள்: இதையும் காட்டுங்க அக்கா ப்ளீஸ்...! கவர்ச்சியில் கும்முனு போஸ் கொடுத்த வி.ஜே.மகேஸ்வரிக்கு தெறிக்கும் கமெண்ட்ஸ்!

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின், யாஷிகா ஆனந்த் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும், அந்த படங்கள் சொல்லிக்கொள்ளும் படி அமையவில்லை. எனவே, கவர்ச்சி கதவை திறந்து, விதவிதமான போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

மேலும் இந்த லாக் டவுன் நேரத்தில், தன்னுடைய உடல் எடையை குறைத்து, செம்ம பிட்டாக மாறியுள்ளார். மேலும் ரோஜா சீரியலில் இவர் முக்கிய கதாப்பாத்திரம் ஒன்றிலும் நடிக்க உள்ளதாக கூறப்பட்ட நிலையில், இவர் நடிப்பில் உருவாகும் 'ரோஜா' சீரியல் வரும் 27 ஆம் தேதியில் இருந்து ஒரு மணிநேரம் ஒளிபரப்பாக உள்ளது. 

மேலும் செய்திகள்: நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வாழ்ந்த... பிரமாண்ட வீடு.. வாங்க பார்க்கலாம்!
 

தமிழ் சீரியல் என்பதால்... வழக்கம் போல் சேலையில் தான் வருவார் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு காத்திருந்தது இன்ப அதிர்ச்சி. இந்த சீரியலில் படு கவர்ச்சியான மாடர்ன் உடையில் வந்து இளசுகள் நெஞ்சங்களை கிறங்கடித்துள்ளார் யாஷிகா. தற்போது இது குறித்த, ஒரு ப்ரோமோ வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது.