RRR vs KGF 2 : ராஜமவுலியின் ஆர்.ஆர்.ஆர் படத்தின் வசூல் சாதனையை யாஷ் நடித்த கே.ஜி.எஃப் 2 திரைப்படம் 25 நாட்களில் முறியடித்துள்ளது.
பிரபல தெலுங்கு நடிகர்களான ராம்சரணும், ஜூனியர் என்.டி.ஆரும் இணைந்து நடித்த படம் ஆர்.ஆர்.ஆர். ராஜமவுலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவான இப்படம் கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி உலகமெங்கும் பிரம்மாண்டமாக வெளியிடப்பட்டது. கதை பாகுபலி ரேஞ்சுக்கு இல்லாவிட்டாலும், பிரம்மிப்பூட்டும் காட்சியமைப்பு படத்தை பிளாக்பஸ்டர் ஹிட் ஆக்கியது.
தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என வெளியிடப்பட்ட அனைத்து மொழிகளிலும் அமோக வரவேற்பை பெற்ற இப்படம் வெளியாகி 45 நாட்கள் ஆகும் நிலையில் இதுவரை ரூ.1127 கோடி வசூலித்துள்ளது.
ஆர்.ஆர்.ஆர் படத்தைத் தொடர்ந்து வெளியான பான் இந்தியா படம் தான் கே.ஜி.எஃப் 2. பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் கடந்த ஏப்ரல் 14ந் தேதி தமிழ் புத்தாண்டன்று வெளியான இப்படம் ரிலீசான அனைத்து மொழிகளிலும் அமோக வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. திரும்பத் திரும்ப பார்க்கத் தூண்டும் வகையில் படம் அமைந்திருந்ததால் பாக்ஸ் ஆபிஸிலும் வசூலை வாரிக் குவித்தது.

வெளியாகி 4 வாரங்கள் ஆகியும் பெரும்பாலான இடங்களில் ஹவுஸ் புல் காட்சிகளாக ஓடி வரும் இப்படம் இந்திய பாக்ஸ் ஆபிஸில் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. அந்த வகையில் ஆர்.ஆர்.ஆர் படத்தின் வசூல் சாதனையை கே.ஜி.எஃப் 2 திரைப்படம் 25 நாட்களில் முறியடித்துள்ளது. இப்படம் இதுவரை ரூ.1130 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படியுங்கள்... பிரபல இயக்குனரிடம் கதை கேட்டபோது தூங்கிட்டேன்... ஆனா அந்த படம் மெகா ஹிட் - விஜய் சேதுபதி சொன்ன ஆச்சர்ய தகவல்
