பெ.விருமாண்டி இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள திரைப்படம் க/பெ ரணசிங்கம். கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இந்த படம் கடந்த 2ம் தேதி ஜீ பிளக்ஸ் என்ற ஆன்லைன் தளத்தில் வெளியானது. ஜீ பிளக்ஸ் என்பது கட்டண முறையில் படம் பார்ப்பதற்காக ஜீ குழுமம்  உருவாக்கியுள்ள ஓடிடி தளமாகும், இதில் க/பெ ரணசிங்கம் படத்தை பார்க்க ரூ.199 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. முதல் வாரத்திலேயே இந்த படம் ரூ.8 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. 

 

இதையும் படிங்க: பேண்ட் போட்டிருக்காங்களா?... உடலோடு ஓட்டி உறவாடும் ஓவர் கிளாமர் உடையில் எமி ஜாக்சனின் கவர்ச்சி அதிரடி...!

துபாயில் வேலை பார்க்க செல்லும் கணவர் ரணசிங்கம்(விஜய்சேதுபதி) அங்கு நடந்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்துவிட, அவருடைய உடலை பல்வேறு சிக்கல்களைக் கடந்து சொந்த ஊருக்கு கொண்டு வர போராடும் மனைவி அரியநாச்சியின் (ஐஸ்வர்யா ராஜேஷ்) துணிச்சல் தான் படத்தின் முழு கதை.  இந்த படத்தில் விஜய் சேதுபதி மனைவியாக நடித்த ஐஸ்வர்யா ராஜேஷுக்கு பாராட்டுக்கள் குவித்து வருகின்றன. இந்நிலையில் க/பெ ரணசிங்கம் படத்தின் கதை என்னுடைய என புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியைச் சேர்ந்த எழுத்தாளர் மிடறு முருகதாஸ் என்பவர் புகார் தெரிவித்துள்ளார்.

 

 

இதையும் படிங்க:  இது உடலா? உடையா?... உடலை இறுக்கி பிடித்திருக்கும் மெல்லிய உடையில் ரைசாவின் லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ்....!

பிழைப்பு தேடி வெளிநாடு செல்லும் தொழிலாளர்களின் அவலநிலையை மையப்படுத்தி தான் எழுதிய “தவிப்பு” என்னும் சிறுகதையை வைத்தே க/பெ ரணசிங்கத்தின் படம் எடுக்கப்பட்டுள்ளதாக புகார் தெரிவித்துள்ளார். நான் எழுதி கடந்த 2017ஆம் ஆண்டு 'கதை சொல்லி மாத' இதழில் வெளியான ‘தவிப்பு' என்ற கதையை மையமாக வைத்து க/பெ.ரணசிங்கம் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த கதை 2018ஆம் ஆண்டு நான் வெளியிட்ட 'தூக்கு கூடை' என்ற புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளது. எனவே அனுமதி பெறாமலேயே எனது கதையை பயன்படுத்தி, க/பெ.ரணசிங்கம் திரைப்படத்தை எடுத்த இயக்குனர் விருமாண்டி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் கூறியுள்ளார்.