நடிகர் விஜய் தேவரக்கொண்டா,  நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் இணைந்து முதல் முறையாக நடித்துள்ள தெலுங்கு திரைப்படம்  'வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் ' . இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகி இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது.

நடிகர் விஜய் தேவரக்கொண்டா, நடித்த தெலுங்கு திரைப்படமான 'அர்ஜுன்ரெட்டி' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து, இந்தி, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. 

இந்த படத்தின் மூலம் தெலுங்கு ரசிகர்களை மட்டுமே இன்றி,  அனைத்து ரசிகர்களையும் கவர்ந்தார் தேவரக்கொண்டா.  இவர் நடிப்பில் கடைசியாக வெளியான 'டியர் காம்ரேட்' திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

இந்த படத்தை தொடர்ந்து, விஜய் தேவரக்கொண்டா தற்போது நடித்துள்ள ரொமான்டிக் படம் 'வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர்'.  இந்த படத்தை இயக்குனர் கிரந்தி மாதவ் இயக்கியுள்ளார். 

ஏற்கனவே இந்த படத்தின் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, தற்போது இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இதில், காதல் மன்னனாகவே மாறி நடித்துள்ளார் விஜய் தேவரக்கொண்டா. 

குறிப்பாக ஐஸ்வர்யா ராஜேஷுடன் கொஞ்சல்... ராசி கண்ணாவுடன் படுக்கை அரை காட்சி என படு பயங்கரமாக நடித்துள்ளார் விஜய் தேவரக்கொண்டா. மேலும் இப்படம் காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 14 ஆம் தேதி, வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது இந்த படத்தின் முதல் லிரிக்கல் பாடல் வெளியாகியாகி ரசிகர்களால் பார்க்கப்பட்டு வருகிறது. இந்த பாடலில், ஐஸ்வர்யா ராஜேஷின் கணவராகவும், ராசி கண்ணா மற்றும் கேத்தரின் தெரேசாவை காதலிலும் சில காட்சிகள் இடம்பெற்றுள்ளது.