cannes 2022 : உலகப்புகழ் பெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவின் சிவப்பு கம்பள வரவேற்பில் பெண் ஒருவர் நிர்வாணமாக போராட்டம் நடத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

உலகப்புகழ் பெற்ற கேன்ஸ் திரைப்பட விழா பிரான்ஸில் நடைபெற்று வருகிறது. கடந்த மே 17-ந் தேதி தொடங்கிய இந்த விழா வருகிற 28-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த விழாவின் சிவப்பு கம்பள வரவேற்பில் பல்வேறு திரையுலகை சேர்ந்த கலைஞர்கள் நடந்து வருவதை கவுரவமாக கருதுவர். அந்த வகையில் நேற்று அந்த விழாவின் சிவப்பு கம்பள வரவேற்பில் ஒரு பரபரப்பு சம்பவம் அரங்கேறி உள்ளது.

பெண் ஒருவர் திடீரென ஆடைகளை கழட்டிவிட்டு நிர்வாணமாக ஓடி வந்து அங்கு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அவர் உடலில் எங்களை கற்பழிப்பதை நிறுத்துங்கள் என்ற வாசகத்தை எழுதியபடி போராட்டத்தில் ஈடுபட்டார். உக்ரைனில் போர் தொடுத்து வரும் ரஷ்ய படையினர் அங்குள்ள பெண்களை கற்பழித்து வருவதாகவும், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகத் தான் அந்தப் பெண் கேன்ஸ் பட விழாவில் நிர்வாணமாக போராட்டம் நடத்தியதாக கூறப்படுகிறது.

Scroll to load tweet…

நிர்வாணமாக போராட்டம் நடத்திய பெண்ணை அங்குள்ள பாதுகாப்பு அதிகாரிகள் அப்புறப்படுத்தினர். இதுதொடர்பான வீடியோ காட்சிகளும் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதையடுத்து அந்த பெண்ணுக்கு ஆதரவாக நெட்டிசன்கள் குரல்கொடுத்து வருகின்றனர். திரைப்பிரபலங்கள் சிலரும் அவருக்கு ஆதரவு தெரிவித்து பதிவிட்டு வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... D Imman : நாயோடு ஒப்பிட்டு இசையமைப்பாளர் டி இமானை நோஸ் கட் செய்த மாஜி மனைவி - வைரலாகும் டுவிட்டர் பதிவு