அபிஷன் ஜீவிந்த், அனஸ்வரா ராஜன் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் 'வித் லவ்' என்ற தமிழ் திரைப்படத்தை மதன் இயக்குகிறார். அப்படத்தின் டைட்டில் டீசம் வெளியாகி உள்ளது.
Abishan Jeevinth debut film : அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் 'வித் லவ்' என்ற தமிழ் திரைப்படத்தை மதன் எழுதி இயக்குகிறார். சௌந்தர்யா ரஜினிகாந்தின் சியோன் ஃபிலிம்ஸ், எம்ஆர்பி என்டர்டெயின்மென்ட் உடன் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. படத்தின் டைட்டில் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. எம்ஆர்பி என்டர்டெயின்மென்ட் சார்பில் மகேஷ் ராஜ் பாசிலியன் மற்றும் நசரத் பாசிலியன் ஆகியோர் சௌந்தர்யா ரஜினிகாந்துடன் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர்.
இந்த ஆண்டின் பிளாக்பஸ்டர் தமிழ் படமான 'டூரிஸ்ட் ஃபேமிலி'யின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, அதன் இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் இந்த ரொமான்டிக் டிராமா மூலம் முதல் முறையாக கதாநாயகனாக அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. காதல் மற்றும் நகைச்சுவை கலந்து இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளதை டைட்டில் டீசர் காட்டுகிறது.

ஹீரோவானார் அபிஷன் ஜீவிந்த்
குட் நைட், லவ்வர், டூரிஸ்ட் ஃபேமிலி உள்ளிட்ட பல வெற்றிப் படங்களைக் கொடுத்த எம்ஆர்பி என்டர்டெயின்மென்ட், இந்தப் படத்திற்காக சௌந்தர்யா ரஜினிகாந்தின் சியோன் ஃபிலிம்ஸுடன் இணைந்துள்ளது. ஹரிஷ் குமார், காவ்யா அனில், சச்சின் நாச்சியப்பன், தேனி முருகன், சரவணன் ஆகியோர் இப்படத்தின் மற்ற முக்கிய நட்சத்திரங்கள்.
ஒளிப்பதிவு ஷ்ரேயஸ் கிருஷ்ணா, இசை ஷான் ரோல்டன், படத்தொகுப்பு சுரேஷ் குமார், கலை இயக்கம் ராஜ்கமல், ஆடை வடிவமைப்பு பிரியா ரவி, இணை தயாரிப்பாளர் விஜய் எம்.பி, நிர்வாக தயாரிப்பாளர் ஏ.பாலமுருகன், பாடல் வரிகள் மோகன் ராஜன், சவுண்ட் மிக்ஸிங் சூரன் ஜி, சவுண்ட் டிசைன் சூரன் ஜி, எஸ்.அழகியகூத்தன், டிஐ மேங்கோ போஸ்ட், கலரிஸ்ட் சுரேஷ் ரவி, சிஜி ராஜன், டப்பிங் ஸ்டுடியோ சவுண்ட்ஸ் ரைட் ஸ்டுடியோ, டப்பிங் இன்ஜினியர் ஹரிஹரன் அருள்முருகன், புரொடக்ஷன் எக்ஸிகியூட்டிவ் டி.பிரசாந்த், புரொடக்ஷன் மேனேஜர் ஆர்.ஜே.சுரேஷ் குமார், பப்ளிசிட்டி டிசைனர் சரத் ஜே.சாமுவேல், டைட்டில் டிசைன் யது முருகன், பப்ளிசிட்டி ஸ்டில்ஸ் ஜோஸ் கிறிஸ்டோ, ஸ்டில்ஸ் மணியன், இணை இயக்குனர் தினேஷ் இளங்கோ, இயக்கக் குழு நிதின் ஜோசப், ஹரிஹர தமிழ்ச்செல்வன், பானு பிரகாஷ், நவீன் என்.கே, ஹரி பிரசாத், தங்கவேல்.



