'Tourist Family Director Abishan Jeevinth New Movie Starts With Poojai டூரிஸ்ட் ஃபேமிலி' படம் மூலமாக அனைவரது கவனம் ஈர்த்த இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்புன் இன்று சென்னையில் நடைபெற்றுள்ளது.
சசிகுமார், சிம்ரன் நடிப்பில் திரைக்கு வந்து பாக்ஸ் ஆபிஸில் புதிய சரித்திரம் படைத்த படம் டூரிஸ்ட் ஃபேமிலி. இந்தப் படத்தை இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கியிருந்தார். இந்தப் படம் கொடுத்த வரவேற்பைத் தொடர்ந்து புதிய அவதாரமாக இப்போது ஹீரோவாக அவதாரம் எடுக்கிறார். அவர் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக இளைஞர்களின் கனவுகன்னியாக கொண்டாடப்படும் நடிகை அனஸ்வரா ராஜன் நடிக்கிறார். முழுக்க முழுக்க நவீன கால இளைஞர்களை கவரும், அருமையான காதல் கதையாக உருவாகும் இப்படத்தை, “லவ்வர், டூரிஸ்ட் ஃபேமிலி” படங்களில் இணை இயக்குநராக பணியாற்றிய, மதன் கதை திரைக்கதை எழுதி இயக்குகிறார்.
Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment இணைந்து வழங்கும், பசிலியான் நஸ்ரேத், மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தின் பூஜை, கோலாகலமாக நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் சசிகுமார், சிம்ரன், RJ பாலாஜி, நடிகர் மணிகண்டன், இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி, லவ்வர் பட இயக்குநர் பிரபு ராம் வியாஸ், டிடி, ஆகியோர் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர்.
தொடர் வெற்றிப் படங்களை வழங்கி வரும் MRP Entertainment நிறுவனம், குட் நைட், லவ்வர் மற்றும் இந்த வருடத்தின் பிளாக்பஸ்டர் வெற்றிப்படமான டுரிஸ்ட் ஃபேமிலி படத்தின் ஹாட்ரிக் வெற்றியைத் தொடர்ந்து, இப்படத்தை தயாரிக்கிறது. Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் இப்படத்தை இணைந்து வழங்குகிறார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் குறித்த விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
