68வது தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் : சிறந்த நடிகர் கமல், தனுஷ்.. சிறந்த நடிகை சாய் பல்லவி.. முழு லிஸ்ட்

2023 ஆம் ஆண்டிற்கான சமீபத்திய சவுத் பிலிம்பேர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பொன்னியின் செல்வன், திருச்சிற்றம்பலம், விக்ரம், கடைசி விவசாயி வெந்து தணிந்தது காடு போன்ற படங்கள் இடம்பெற்றுள்ளது. 68வது பிலிம்பேர் விருதுகள் பெற்றவர்களின் முழுமையான விவரங்களை இங்கு பார்க்கலாம்.

Winners of the 68th Filmfare Awards South (Tamil) 2023: full list here-rag

68வது ஃபிலிம்ஃபேர் விருதுகள் தமிழ் 2023, சிறந்த நடிகர்கள், இசையமைப்பாளர்கள், இயக்குநர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு வருடந்தோறும் விருதுகளை வழங்கி சிறப்பித்து வருகிறது. சென்ற ஆண்டில் சிறந்து விளங்கும் திறமையாளர்களை கவுரவிக்கும் வகையில் ஃபிலிம்பேர் டிஜிட்டல் முறையில் வெற்றியாளர்களை அறிவித்து வருகிறது.

பிலிம்பேர் விருது வெற்றியாளர்கள் தமிழ்- 2023

சிறந்த படம் - பொன்னியின் செல்வன் பகுதி 1

சிறந்த இயக்குனர் - மணிரத்னம் (பொன்னியின் செல்வன் பகுதி 1)

சிறந்த திரைப்படம் (விமர்சகர்கள்) - கடைசி விவசாயி (மணிகண்டன்)

Winners of the 68th Filmfare Awards South (Tamil) 2023: full list here-rag

சிறந்த நடிகர் லீட் ரோல் (ஆண்) - கமல்ஹாசன் (விக்ரம்)

சிறந்த நடிகர் (விமர்சகர்கள்) - தனுஷ் (திருச்சிற்றம்பலம்)

ஆர். மாதவன் (ராக்கெட்ரி)

சிறந்த நடிகர் லீட் ரோல் (பெண்) - சாய் பல்லவி (கார்கி)

சிறந்த நடிகை (விமர்சகர்கள்) - நித்யா மேனன் (திருச்சிற்றம்பலம்)

துணை வேடத்தில் சிறந்த நடிகர் (ஆண்) - காளி வெங்கட் (கார்கி)

துணை வேடத்தில் சிறந்த நடிகர் (பெண்) - ஊர்வசி (வீட்ல விசேஷம்)

சிறந்த இசை ஆல்பம் - ஏ.ஆர் ரஹ்மான் (பொன்னியின் செல்வன் பாகம் 1)

சிறந்த பாடல் வரிகள் - தாமரை (மறக்குமா நெஞ்சம்)

சிறந்த பின்னணிப் பாடகர் (ஆண்) - சந்தோஷ் நாராயணன் (தேன்மொழி - திருச்சிற்றம்பலம்)

Winners of the 68th Filmfare Awards South (Tamil) 2023: full list here-rag

சிறந்த பின்னணிப் பாடகர் (பெண்) - அந்தரா நந்தி (அலைக்கடல்- பொன்னியின் செல்வன் பகுதி 1)

சிறந்த அறிமுகம் (பெண்) - அதிதி சங்கர் (விருமன்)

சிறந்த அறிமுகம் (ஆண்) - பிரதீப் ரங்கநாதன் (லவ் டுடே)

சிறந்த ஒளிப்பதிவு - கே.கே.செந்தில் குமார் (ஆர்ஆர்ஆர்)

ரவி வர்மன் (பொன்னியின் செல்வன் பகுதி 1).

Indian 2 Live Update: 'இந்தியன் 2' படத்தில்.. சேனாதிபதியாக கமல் கலக்கினாரா? LIVE அப்டேட்ஸ்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios