Indian 2 Live Update: 'இந்தியன் 2' படத்தில்.. சேனாதிபதியாக கமல் கலக்கினாரா? LIVE அப்டேட்ஸ்!
உலக நாயகன் நடிப்பில், இன்று வெளியாகியுள்ள 'இந்தியன் 2' திரைப்படம் தமிழகத்தில் 9 மணிக்கு வெளியானாலும் புதுவை, ஆந்திரா, கேரளா போன்ற மாநிலங்களில் காலை 6 மணிக்கே ரிலீஸ் ஆகியது. அங்கிருந்தபடி ரசிகர்கள் கூறிய லைவ் அப்டேட் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
கமல்ஹாசன் மற்றும் ஷங்கர் காம்போவில் உருவாகியுள்ள இந்தியன் 2 திரைப்படம் சுமார் 6 ஆண்டுகள் காத்திருப்புக்கு பின்னர் தற்போது வெளியாகியுள்ளது. 1996-ஆம் ஆண்டு வெளியான பிளாக் பாஸ்டர் படமான இந்தியன் படத்தின் இரண்டாம் பாகமாக வெளியாகியுள்ள இந்த படத்தில் உலக நாயகன் 106 வயது நிரம்பிய விடுதலை போராட்ட வீரர் சேனாதிபதியாக நடித்துள்ளார்.
மேலும் காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், ப்ரியா பவானி ஷங்கர், சமுத்திக்கனி, பாபி சிம்ஹா, விவேக், மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சரி இந்த படம் எப்படி இருக்கிறது என ரசிகர்கள் கூறி வரும் லைவ் அப்டேட் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.
கமல் உடலை முறுக்கி சண்டை போடும் காட்சியை வெளியிட்டு... மிகவும் அருமையான சீன் என ஆச்சர்யத்தோடு கூறியுள்ள ரசிகர் ஒருவர் ஒன் மேன் ஆர்மியாக இரண்டாம் பாதியில் கமல் கலக்கி உள்ளதாக தெரிவித்துள்ளார்.
USA -வை சேர்ந்த ரசிகர் கமல் சார் வாழும் லெஜெண்ட்... இந்தியன் தாத்தா நெருப்பாக உள்ளார் என தெரிவித்துள்ளார்.
முதல் பாதி எதிர்பார்த்தது போல் இல்லை என ஒரு ரசிகர் தன்னுடைய அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
இயக்குனர் ஷங்கர் மற்றும் கமல் சார் இருவருக்கும் தலைவணங்குகிறேன். அருமையான சோசியல் மெசேஜ். இதயங்களை வென்று விட்டது கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் என மற்றொரு ரசிகர் தெரிவித்துள்ளார்.
அசாதாரண நடிப்பு, பிஜிஎம் சிதற வைக்கிறது... அதிரடி காட்சிகள் நிறைந்துள்ளதாக இப்படம் உள்ளது என ஒரு ரசிகர் கூறியுள்ளார்.