குருவி.. புலி.. பீஸ்ட்.. விஜயை விடாமல் துரத்தும் "மிருக தோஷம்" - கைகொடுக்குமா லியோ? - எதிர்பார்ப்பில் Fans!
தமிழ் திரை உலகை பொறுத்தவரை முன்னணி நடிகர்களின் பட்டியலில் இருக்கும் அனைவருமே பல சருக்கல்களை சந்தித்து தான் இன்று மிகப்பெரிய உச்சத்தில் இருக்கின்றனர். இது தளபதி விஜய் அவர்களுக்கும் பொருந்தும் என்பது அனைவரும் அறிந்ததே.
அந்த வகையில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் திரை உலகில் ஹீரோவாக பயணித்து வரும் முன்னணி நட்சத்திரமான தளபதி விஜய் அவர்கள் ஆரம்பம் முதல் தற்பொழுது வரை சில பெயிலியர் திரைப்படங்களை கொடுத்துள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் மிருகங்கள் சம்பந்தமான பெயர்களை அவருடைய படங்களுக்கு வைக்கும் பொழுது அது பெரிய அளவில் ஹெட் ஆவதில்லை என்கின்ற ஒரு பேச்சு கோலிவுட் உலகத்தில் தொடர்ச்சியாக இருந்து வருகிறது.
தளபதி விஜய் அவர்களுடைய நடிப்பில் வெளியான குருவி, புலி, பீஸ்ட் போன்ற திரைப்படங்கள் பெரிய அளவில் ஹிட்டாகாதது குறிப்பிடத்தக்கது. அந்த வரிசையில் மிருகத்தின் பெயரைக் கொண்ட இந்த லியோ திரைப்படம் பெரும் சாதனைகளை புரியுமா? அல்லது இதற்கு முன்பு வெளியான விஜய் அவர்களுடைய ஒரு சில திரைப்படங்களைப் போல இதுவும் பிளாப்பாகுமா? என்கின்ற விவாதம் தற்பொழுது எழுந்துள்ளது.
ஆனால் தளபதி விஜய் அவர்களுடைய நடிப்பில் நேற்று வெளியான லியோ திரைப்படம் தனது முதல் நாளிலேயே உலக அளவில் சுமார் 148 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதிலும் குறிப்பாக 4 மணி காட்சிகள் இல்லாமல். பெரிய அளவிலான மல்டிப்ளக்ஸ் திரையரங்குகளில் வெளியாகாமல் லியோ திரைப்படம் உலக அளவில் இத்தனை கோடி ரூபாயை வசூல் செய்துள்ளது ஒரு நல்ல துவக்கமாகவே பார்க்கப்படுகிறது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
இருப்பினும் இந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் லலித் குமார் பேசும்போது.. லியோ திரைப்படம் ஆயிரம் கோடி ரூபாய் வசூலை எட்டாது என்று தெரிவித்துள்ளது விஜய் அவர்களுடைய ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. ஹிந்தி மொழியில் இருந்து பெரிய அளவில் வசூலை எதிர்பார்க்காத நிலையில் லியோ திரைப்படம் ஆயிரம் கோடி ரூபாய் வசூலை எட்டாது என்று லலித்குமார் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.