பத்ம பூஷனைத்தொடர்ந்து, பாரத ரத்னா, நோபெல் பரிசு என்று டிராவல் ஆகியிருக்கவேண்டிய வைரமுத்துவின் நிலையை நினைத்தால் படுபரிதாபமாக இருக்கிறது. கூகுளின் விக்கிபீடியாவில் தற்போது அவர் பெயரை, அதாவது இயற்பெயரை ‘செக்ஸ் டார்ச்சர் வைரமுத்து’ என்றே மாற்றி விட்டார்கள்.

 

தற்போது தனது தோழிக்கு வைரமுத்து லவ் டார்ச்சர் கொடுத்ததாக வெளியான ஒரு ஆடியோவைத் தொடர்ந்து இன்னும் அதிக பரபரப்புக்கு ஆளாகியுள்ள வைரத்துக்கு இப்போது வட இந்திய நாளேடுகளும் முதல் பக்கத்தில் செய்திகளை வழங்கி  முதல் மரியாதை செய்ய ஆரம்பித்துள்ளன.

தன்னைப்பற்றி வரக்கூடிய செய்திகளுக்கு முதல் பக்கத்தில் இடம் ஒதுக்காவிட்டால், சம்பந்தப்ப்பட்ட நிறுவனத்தில் உயர்ந்த இடத்திலிருப்பவர்க்கு போனைப் போட்டு உதவி ஆசிரியர்களுக்கு ஆப்பு அடிக்கும் வழக்கம் கொண்டவர் வைரமுத்து என்பது இங்கே குறிப்பிட்டே ஆகத்தக்கது.