- Home
- Cinema
- கருத்து
- Immortal Review : ஹாலிவுட் ரேஞ்சுக்கு பில்டப் விடப்பட்ட இம்மார்டல் ஒர்த்தா? ஒர்த் இல்லையா? முழு விமர்சனம் இதோ
Immortal Review : ஹாலிவுட் ரேஞ்சுக்கு பில்டப் விடப்பட்ட இம்மார்டல் ஒர்த்தா? ஒர்த் இல்லையா? முழு விமர்சனம் இதோ
Immortal Movie Review : மாரியப்பன் சின்னா இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் குமார் மற்றும் கயாடு லோஹர் நடிப்பில் திரைக்கு வந்துள்ள இம்மார்டல் திரைப்படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம்.

Immortal Movie Review
ஜிவி பிரகாஷ் நாயகனாக நடித்துள்ள படம் இம்மார்டல். இப்படத்தில், ஜிவிக்கு ஜோடியாக கயாடு லோஹர் நடித்துள்ளார். சென்னையைச் சேர்ந்த ஒரு இளைஞனின் வாழ்க்கையில் ஒரு பெண் நுழையும் போது, ஏற்படும் அமானுஷ்ய சம்பவங்களை மையமாகக் கொண்டு, கலக்கலான கமர்ஷியல் படமாக “இம்மார்டல்” திரைப்படத்தை உருவாக்கி உள்ளார் அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா. ஃபேண்டஸி ஜானரில் உருவாகியுள்ள இப்படம் இன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி உள்ளது. அதன் ட்விட்டர் விமர்சனத்தை பார்க்கலாம்.
இம்மார்டல் ட்விட்டர் விமர்சனம்
தமிழ் சினிமாவில் வழக்கமான கதைக்களத்திலிருந்து விலகி, வித்தியாசமான முயற்சியாக உருவாகியிருக்கிறது இந்த திரைப்படம். ஆரம்பத்தில் படம் ஒரு அழகான காதல் கதையாகவே நகர்கிறது. ஆனால் கதை செல்லச் செல்ல எதிர்பாராத விதமாக ஃபேண்டஸி மற்றும் த்ரில்லர் களத்திற்குள் நுழைகிறது. கதையின் இந்த மாற்றம் தான் படத்தின் முக்கிய பலமாக அமைந்துள்ளது. குறிப்பாக மர்மம் கலந்த கதாபாத்திரங்களும், அடுத்ததாக என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பும் படம் முழுவதும் சுவாரஸ்யத்தை தக்க வைக்கின்றன.
ஜி.வி. பிரகாஷ் தனது கதாபாத்திரத்தை சிறப்பாக கையாண்டுள்ளார். அவரது நடிப்பு படத்திற்கு தேவையான எமோஷனையும் அழுத்தத்தையும் கொடுக்கிறது. அதேபோல் கயாடு லோஹர் ஏற்றுள்ள மர்மமான கதாபாத்திரம் கதையின் மீதான ஆர்வத்தை மேலும் அதிகரிக்கிறது.
படத்தின் ஒளிப்பதிவு, விஎஃப்எக்ஸ் மற்றும் பின்னணி இசை குறிப்பிடத்தக்க அம்சங்களாக இருக்கின்றன. குறிப்பாக காட்சிகளுக்கு ஏற்ப அமைந்துள்ள பின்னணி இசை த்ரில்லர் உணர்வை வலுப்படுத்துகிறது. படத்தின் ரன்னிங் டைமும் அதிகமாக இல்லாததால், கதை தேவையற்ற இடங்களில் இழுவையாக தெரியவில்லை. மொத்தத்தில், காதல், மர்மம் மற்றும் ஃபேண்டஸி த்ரில்லர் அம்சங்களை சரியான அளவில் கலந்து கொடுத்திருக்கும் ஒரு வித்தியாசமான முயற்சி இது என குறிப்பிட்டுள்ளார்.
#Immortal : [3/5] A fresh & different attempt in Tamil cinema!
The film starts off like a romantic drama but slowly shifts into a gripping fantasy thriller.🫣
'GV Prakash' delivers a solid performance, while Kayadu Lohar’s mysterious character adds more intrigue. The visuals,… https://t.co/sukHQn0tYApic.twitter.com/2P5nKY1CI6— Tharani ʀᴛᴋ (@iam_Tharani) September 4, 2026
இம்மார்டல் எக்ஸ் தள விமர்சனம்
ஆரம்பம் முதல் இறுதி வரை ரசிகர்களை கட்டிப்போடும் வகையில் உருவாகியிருக்கும் ஒரு விறுவிறுப்பான பொழுதுபோக்கு திரைப்படம் இது. ஜிவி பிரகாஷ் குமார் மற்றும் கயாது லோஹர் இருவரும் தங்களது கதாபாத்திரங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். சாம் சி.எஸ்.-ன் இசை மற்றும் பின்னணி இசை படத்தின் முக்கிய பலங்களில் ஒன்றாக அமைந்துள்ளது. படத்தின் ஆக்ஷன் காட்சிகள், காதல் காட்சிகள், இடைவேளை பிளாக் மற்றும் கிளைமாக்ஸ் என அனைத்துமே ரசிகர்களை கவரும் வகையில் அமைந்துள்ளன. திரையரங்கில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் என பாராட்டி உள்ளார்.
#IMMORTAL 🔥🎬
⭐️⭐️⭐️⭐️⭐️
A gripping entertainer that keeps you hooked till the end! @gvprakash and Kayadu were brilliant, while Sam CS’s music was top-notch. The action, romance, interval, and climax were superb!
Must watch in theatres! Highly recommended! ⭐🔥— Kaamini (@kaamini_samraj) September 4, 2026
இம்மார்டல் சமூக வலைதள விமர்சனம்
இம்மார்டல் திரைப்படம் தமிழ் சினிமாவில் வழக்கமாக பார்க்கும் கதைக்களத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு முயற்சியாக இருக்கிறது. ஜிவி பிரகாஷ் குமார் தனது கதாபாத்திரத்தை சிறப்பாக கையாண்டுள்ளார். சில இடங்களில் செம சிரிப்பை வர வைக்கும் காட்சிகள் இருப்பது அருமை. நடிகை கயாடு லோஹருக்கு அருமையான ரோல் என பதிவிட்டுள்ளார்.
#Immortal - out of the box story and screenplay for Tamil cinema !
Well done @gvprakash bro !!
Obsession meter - sila edathula Sema sirippu !
Brilliant role for @11Lohar !!— Prashanth Rangaswamy (@itisprashanth) September 4, 2026
பாசிடிவ் விமர்சனங்களை பெறும் இம்மார்டல்
ஹாலிவுட்ல மட்டுமே பார்த்து பழகின படங்கள் எல்லாம் தமிழ்ல வராதான்னு ஏங்கி இருக்கோம். இப்போ அதெல்லாம் நடந்துட்டு இருக்கு. இம்மார்டல் படம் ஒரு நல்ல அட்டெம்ப்ட். தமிழ் சினிமாவிற்கு சிறந்த படம். இந்த மாதிரி படங்கள்ல நடிக்க ஓகே சொன்னதுக்கு ஜிவி பிரகாஷுக்கு பாராட்டுக்கள். இந்த படத்துல அவருக்கு கஷ்டமான ரோல், ஆனா அதை ரொம்ப ஈஸியா நடிச்சிருக்காரு. இந்த வாரம் ரிலீஸ் ஆன படங்கள்ல இந்த படம் உங்களுக்கு புதுசா இருக்கும் ட்ரை பண்ணி பாருங்க என குறிப்பிட்டுள்ளார்.
ஹாலிவுட்ல மட்டுமே பார்த்து பழகின படங்கள் எல்லாம் தமிழ்ல வராதான்னு ஏங்கி இருக்கோம்..
இப்போ அதெல்லாம் நடந்துட்டு இருக்கு #Immortal Good Attempt From தமிழ் சினிமா Good Experimental படம்... 👌
Hats of @gvprakash இந்த மாதிரி படங்கள்ல நடிக்க Ok சொன்னதுக்கு...#GVPRAKASH இந்த… pic.twitter.com/Ck3jHXqRLv— 𝙈𝙊𝙑𝙄𝙀 𝙏𝙄𝙈𝙀 🍿 (@moviiettime) September 4, 2026

