why you forget to immediate our party the fan of famous political party asked

தமிழ் படம் 2.0-ன் டீசர் சமீபத்தில் ரிலீசாகி, நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. தமிழ் படம் 2.0-ல் தமிழில் இதுவரை ரிலீசாகி இருக்கும் அனைத்து திரைப்படங்களையும், ஏகமாக கலாய்த்திருக்கின்றனர். விஜய், அஜித், விஷால், விக்ரம், விஜய் சேதுபதி என எந்த வித பாகுபாடும் இல்லாமல், கலாய்த்திருக்கிறார்கள் இந்த 2.0 திரைப்படத்தில்.

அதே போல தமிழக அரசியல்வாதிகளையும், தமிழ்படம் 2.0ல் தைரியமாக கலாய்த்திருக்கிறார். சி.எஸ்.அமுதன். இந்த ஒரு காரணத்திற்காகவே இந்த படத்தின் டீசர் 5 மில்லியன் பார்வையாளர்களை கடந்து , இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. வெகு காலத்திற்கு பிறகு, இப்போது தான் அரசியல்வாதிகளை கலாய்க்கும் தைரியம் வந்திருக்கிறது தமிழ் திரைப்படங்களுக்கு.

இந்த தமிழ்படம் 2.0 டீசரில் இடம் பெற்றிருந்த காட்சிகளை பார்த்த, பாஜக ரசிகர் ஒருவர் எங்களை எல்லாம் கலாய்க்க மாட்டீர்களா? என அப்படத்தயாரிப்பாளரிடம் கேட்டிருக்கிறார்.

அதற்கு பதிலளித்த ”தமிழ் படம் 2.0”ன் தயாரிப்பாளர், ” என்னால் நன்றாக புரிந்துகொள்ள முடிகிறது. இந்த மிக முக்கியமான பிரச்சனையை நாங்கள் கருத்தில் கொள்கிறோம் என பதிலளித்திருக்கிறார்.” இந்த பதிலை வைத்து பார்க்கும் போது இனி வரப்போதும் தமிழ்படம் 2.0ல், பாஜக-வையும் பார்க்கலாம் என தெரிகிறது.