- Home
- Cinema
- என்னால் கண்ணீரை அடக்க முடியல... செல்வராகவன் வாழ்க்கையில் என்ன நடக்குது? கன்பியூஸ் ஆன ரசிகர்கள்
என்னால் கண்ணீரை அடக்க முடியல... செல்வராகவன் வாழ்க்கையில் என்ன நடக்குது? கன்பியூஸ் ஆன ரசிகர்கள்
இயக்குநர் செல்வராகவன் அவர் மனைவியை பிரிந்துவிட்டதாக பேச்சு அடிபடும் நிலையில், தற்போது இன்ஸ்டாகிராமில் அவர் பதிவிட்டுள்ள வீடியோ பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Selvaraghavan Viral Video
இயக்குனர் செல்வராகவன், அவரது மனைவி கீதாஞ்சலியை பிரிந்துவிட்டதாகவும், அவர்கள் இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டதால் தான் கீதாஞ்சலி தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் இருந்து செல்வராகவனின் புகைப்படங்களை நீக்கியதாகவும் சர்ச்சை எழுந்தது. ஆனால் இதுகுறித்து இயக்குநர் செல்வராகவன் எதிலும் ஓப்பனாக பேசாவிட்டாலும் சூசகமாக கருத்து சொல்லி வீடியோக்களை அவ்வப்போது பதிவிட்டு வருகிறார். அப்படி அவர் கருத்து சொல்லி பதிவிட்டுள்ள வீடியோ ஒன்று தற்போது வெளியாகி இணையத்தில் படு வைரலாகி வருகிறது.
செல்வராகவன் பேசியது என்ன?
அதில் அவர் பேசியதாவது : “ரொம்ப நாளா சொல்லனும்னு ஆசைப்பட்டேன். இன்னைக்கு அதுக்கு சரியான சந்தர்ப்பம் அமைஞ்சிருக்கு. கொஞ்சம் சென்சிடிவ் ஆகவும் இருக்கலாம், ரொம்ப சென்சிடிவ் ஆகவும் இருக்கலாம். இது இன்னைக்கு எனக்கு மட்டுமில்ல, கோடான கோடி மக்களுக்கும் நடந்திருக்கு. அதை புரிஞ்சிகிட்டவங்க எத்தனை பேருனு தெரியல. நம் வாழ்க்கையில், இது இப்படி நடக்கணும், அது அப்படி நடக்கணும்னு துள்ளியமா கணக்கு போட்டு கடவுள் அமைச்சிருக்காரு. எவ்வளவு சந்தோஷமாக இருந்தாலும், எவ்வளவு பெரிய சோகமாக இருந்தாலும் அது முன்னாடியே நிர்ணயிக்கப்பட்டது.
கடவுளால் நிர்ணயிக்கப்பட்டது
இதற்கு சிறந்த உதாரணமாக என்னையே எடுத்துக்கலாம். 3 வருஷத்துக்கு முன்னாடி, என் வாழ்க்கையில் தாங்க முடியாத ஒரு விஷயம் நடந்தது. அது எந்த அளவுக்கு என்னை பாதித்தது என்றால், அது நடந்ததுக்கு அப்புறம் என் கண்களில் இருந்து தண்ணி கொட்டிகிட்டே இருந்தது. அன்னைக்கு எனக்கு நடந்த விஷயம் என்னை பலமாக்குவதற்கு தான் என்பது பின்னாளில் எனக்கு புரிந்தது. அதனால் எது நடந்தாலும், அது ஏற்கனவே கடவுளால் நிர்ணயிக்கப்பட்டது என்பதை புரிந்துகொள்ளுங்கள்” என அந்த வீடியோவில் பேசி இருக்கிறார் செல்வராகவன்.
கன்பியூஸ் ஆன ரசிகர்கள்
விவாகரத்து ஏற்கனவே கடவுள் போட்ட கணக்கு என்பதை தான் செல்வராகவன் சொல்ல வருகிறார் என்று நெட்டிசன்கள் யூகித்து வருகிறார்கள். செல்வராகவன் - கீதாஞ்சலி ஜோடிக்கு கடந்த 2011-ம் ஆண்டு திருமணம் ஆனது. இவர் செல்வராகவனின் இரண்டாம் மனைவி ஆவார். முதலாவதாக அவர் நடிகை சோனியா அகர்வாலை திருமணம் செய்துகொண்டார். ஆனால் அந்த திருமணம் விவாகரத்தில் முடிந்தது. செல்வராகவன் - கீதாஞ்சலி ஜோடிக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

