ரிஷப் ஷெட்டியின் 'காந்தாரா சாப்டர் 1' பட காட்சியை கிண்டலடிக்கும் விதமாக நடித்ததற்காக ரன்வீர் சிங் மீது பெங்களூருவில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதைப்பற்றி விரிவாக பார்க்கலாம்.

Legal action on Ranveer Singh : 'துரந்தர்' படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றிக்குப் பிறகு, நடிகர் ரன்வீர் சிங் சர்ச்சையில் சிக்கி உள்ளார். நவம்பர் 28ந் தேதி அன்று 'காந்தாரா சாப்டர் 1' படத்தின் புனிதமான சவுண்டி காட்சியைப் போலவே நடித்து கிண்டல், நடிகர் ரன்வீர் சிங் சர்ச்சையில் சிக்கியுள்ளார். பெங்களூருவில் உள்ள ஹைகிரவுண்ட்ஸ் காவல் நிலையத்தில் வழக்கறிஞர் பிரசாந்த் மெத்தல் என்பவர் அளித்த புகாரின் பேரில் ரன்வீர் சிங் மீது 3 பிரிவுகளின் கீழ் எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளனர்.

டிசம்பர் 2025-ல் வெளியான 'துரந்தர்' திரைப்படம், வெறும் மூன்று வாரங்களில் 1000 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து, இந்தியாவின் அதிக வசூல் செய்த இந்திப் படம் என்ற பெருமையைப் பெற்றது. இந்த நேரத்தில் அவர் மீது எஃப் ஐ ஆர் பதிவு செய்யப்பட்டு இருப்பது பாலிவுட் வட்டாரத்தில் பேசு பொருள் ஆகி உள்ளது.

ரன்வீர் சிங் மீது வழக்குப்பதிவு

நவம்பர் 28 அன்று கோவாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவின் (IFFI) நிறைவு விழாவில் கலந்துகொண்டபோது காந்தாரா பட தெய்வக் காட்சியைப் போல அவர் நடித்தது தற்போது அவருக்கு வினையாகி உள்ளது.

எதிர்ப்புகளுக்குப் பிறகு, மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தியதற்காக ரன்வீர் மன்னிப்பும் கேட்டிருந்தார். டிசம்பர் 2 அன்று, ரன்வீர் சிங் சமூக ஊடகங்களில், "படத்தில் ரிஷப்பின் அற்புதமான நடிப்பை ஊக்குவிப்பதே எனது நோக்கமாக இருந்தது. ஒரு நடிகராக, அந்த குறிப்பிட்ட காட்சியை அப்படிச் செய்வதற்கு எவ்வளவு கடின உழைப்பு தேவை என்பதை நான் அறிவேன், அதற்காக நான் அவரை மிகவும் மதிக்கிறேன்" என்று எழுதினார்.

ரன்வீர் அடுத்ததாக 'துரந்தர்: தி ரிவென்ஜ்' படத்தில் நடிக்கவுள்ளார், இது மார்ச் 19ந் தேதி அன்று வெளியாக உள்ளது. இந்த படம், யாஷின் 'டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்' படத்துடன் மோதவுள்ளது.