புஷ்பா இரண்டாம் பாகத்தில் நடிப்பதற்கு தற்போது விஜய் சேதுபதி ஒப்பந்தம் ஆகி இருப்பதாக செய்தி வெளியாகி வருகிறது. இதற்கு முன்னதாக பாகம் ஒன்றில் நடிப்பதற்கு விஜய் சேதுபதிக்கு வாய்ப்பு கிடைத்தது. அப்போது இவர் கேட்ட பெரிய தொகையால் அப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கை நழுவியது. இந்தப் படத்தில் நடிப்பதற்கு ரூ. 10 கோடி சம்பளம் கேட்டதாக கிசு கிசுக்கப்பட்டது.

புஷ்பா இரண்டாம் பாகத்தில் நடிப்பதற்கு தற்போது விஜய் சேதுபதி ஒப்பந்தம் ஆகி இருப்பதாக செய்தி வெளியாகி வருகிறது. இதற்கு முன்னதாக பாகம் ஒன்றில் நடிப்பதற்கு விஜய் சேதுபதிக்கு வாய்ப்பு கிடைத்தது. அப்போது இவர் கேட்ட பெரிய தொகையால் அப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கை நழுவியது. 

ஆனால், அதே படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிப்பதற்கு தற்போது விஜய் சேதுபதி ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். முதல் பாகத்தில் நடிப்பதற்கு ரூ. 10 கோடி விஜய் சேதுபதி சம்பளமாக கேட்டதாகத் தெரிகிறது. ஆனால், இந்த சம்பளத்தை கொடுப்பதற்கு படக்குழு தயாராக இல்லை. தெலுங்கில் வெற்றிப் படமாக ஓடிய ரங்காஸ்தலம் படத்தை இயக்கிய சுகுமார் புஷ்பா படத்தை இயக்கி இருந்தார். தெலுங்கில் மட்டுமின்றி தமிழிலும் வெளியாகி இந்தப் படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. 

சல்லடை போன்ற தங்க நிற டைட் உடையில்.. 48 வயதிலும் உச்சகட்ட கவர்ச்சியில் மலைக்க வைக்கும் மலைக்கா அரோரா..!

இத்துடன், இந்தப் படம் தமிழில் வெளியாகக் கூடாது என்று விஜய் சேதுபதி கண்டிப்பாக கூறியதாகவும் செய்தி வெளியாகி இருந்தது. சம்பளம், இந்த கண்டிப்பு இரண்டும் விஜய் சேதுபதியின் வாய்ப்பை பறித்தது என்று கிசு கிசுக்கப்பட்டது. இந்த நிலையில் தான் படக்குழு பஹத் பாசிலை ஒப்பந்தம் செய்ததாக தகவல் வெளியானது. 

நடிகர் வைஷ்ணவ் தேஜ், கீர்த்தி ஷெட்டி நடித்து இருந்த உப்பேனா என்ற படத்தில் நடிப்பதற்கு ரூ. 5 கோடி சம்பளமாக விஜய் சேதுபதி பெற்று இருந்தார். இந்த நிலையில், புஷ்பா திரைப்படம் பெரிய பட்ஜெட் படம் என்பதாலும் அதிக சம்பளம் கேட்டு இருந்தார். 

பிரேமம் நிவின் பாலியா ? ..குண்டாகி ஆளே அடையாளம் தெரியாம ஆகிட்டார்!

சமீபத்தில் வெளியாகி வெற்றிப் படமாக இன்னும் ஓடிக் கொண்டு இருக்கும் விக்ரம் படத்தில் நடிப்பதற்கு விஜய் சேதுபதி சம்பளமாக ரூ. 10 கோடி பெற்றார் என்ற செய்தி வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. புஷ்பா II படத்தில் விஜய் சேதுபதி, பஹத் பாசில் இருவரும் நடிக்கின்றனர்.

vijay sethupathi: விஜய் சேதுபதி கமர்ஷியல் லாபம் கொடுக்கும் நடிகரா?