திரையுலகில் சிலருக்கு சில ரோல்கள் மட்டுமே பொருந்தும். ஆனால், இதையெல்லாம் உடைத்து தற்போது இந்தியா முழுவதும் பேசப்படும் நடிகராக இருந்து வருபவர் நடிகர் விஜய் சேதுபதி.
திரையுலகில் சிலருக்கு சில ரோல்கள் மட்டுமே பொருந்தும். ஆனால், இதையெல்லாம் உடைத்து தற்போது இந்தியா முழுவதும் பேசப்படும் நடிகராக இருந்து வருபவர் நடிகர் விஜய் சேதுபதி.
''நீங்கள் அற்புதமான நடிகர்'' என்று இவரை பாலிவுட் ஹீரோ ஷாரூக்கான் பாராட்டி இருந்தார். இதை பல்வேறு கட்டங்களில் சாதித்தும் வருகிறார் விஜய் சேதுபதி. எந்த ரோல் கொடுத்தாலும் அதில் ஜொலிக்கிறார். எதார்த்தமான நடிப்பு.
விக்ரம் வேதா படத்தின் மூலம் மீண்டும் இந்திய ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். நல்ல வசூலை அள்ளிக் கொடுக்கும் அளவிற்கு அழகான ஹீரோ என்று கூறுவதற்கும் இல்லை. ஆனால், திறமையான நடிகர் என்பதில் சந்தேகமில்லை. எந்த ரோல் கொடுத்தாலும் வெளுத்து வாங்கும் நடிகராக இருக்கிறார். கஷ்டப்பட்டு நடிப்பதில்லை. நடிப்பு அவருக்கு எதார்த்தமாக வருகிறது. இப்படித்தான் நடிக்க வேண்டும் என்ற எந்தவித மெனக்கெடலும் இல்லாமல் எதார்த்தமானதாக அவரது நடிப்பு இருக்கிறது.
கவர்ச்சி காட்டுவதில் அக்கா யாஷிகாவுக்கே டஃப் கொடுக்கும் ஒஷீன்..! ப்பா... அதுக்குன்னு இப்படியா?
விக்ரம் படத்தில் கமல் ஹாசனுடன் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து, இந்திய முழுவதும் பெரிய அளவில் கைத்தட்டலைப் பெற்றுள்ளார். இந்தப் படத்தில் ஆட்டோவில் வந்து, அதன் மீது படுத்து, பின்னர் இறங்கி நடந்து வரும் அறிமுக காட்சி பிரமிக்க வைக்கும்.
இந்தப் படத்தை அடுத்து அட்லி இயக்கத்தில் ஷாரூக்கான் உடன் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதே நேரத்தில் அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியாகி இருந்த புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிப்பதற்கு ஒப்புக் கொண்டுள்ளார். இதிலும் வில்லன் கதாபாத்திரம் என்று கூறப்படுகிறது. புஷ்பா 2வில் தரமான போலீஸ் அதிகாரியாக பஹத் பாசில் நடித்து இருந்தார். இவருடன் இணைந்துதான் விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி நடித்து இருந்தார். இருவரின் நடிப்பும் வெகுவாக பாராட்டப்பட்டது. விக்ரம் வெற்றிக்குப் பின்னர் புஷ்பா 2ல் நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தம் ஆகியுள்ளார். இவருடன் பஹத் பாசிலும் நடிக்கிறார். விரைவில் ஷாரூக்கானுடன் ஜவான் படத்தில் நடிக்கவுள்ளார்.
தற்கொலை செய்து கொண்ட நடிகை சில்க் ஸ்மிதா.. இறுதி நேர உருக்கமான கடிதம்!
இந்தப் படத்தில் நடிகை நயன்தாரா நடிக்கிறார். திருமணத்திற்குப் பின்னர் நயன்தாரா நடிக்கும் முதல் படம் ஜவான். இதற்காக அவர் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு மும்பை சென்றுள்ளார். இந்தப் படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி இருக்கிறது. முகம் முழுவதும் பாண்டேஜ் போட்ட மாதிரியான ஷாரூக்கானின் புகைப்படம் வெளியாகி உள்ளது.
நடிகர் ஷாரூக்கானின் மனைவி கவுரி கான் நடத்தும் ரெட் சில்லிஸ் என்டர்டேயின்மென்ட் நிறுவனம் ஜவான் படத்தை தயாரிக்கிறது. இந்தப் படம் இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என ஐந்து மொழிகளில் வெளியாகிறது.
கவர்ச்சியாக பார்க்க ஆசைப்படுபவர்களுக்கு ஆப்பு வைக்கும் கிரண்... போன் போட்டா என்ன நடக்குது தெரியுமா?
அதேசமயம் புஷ்பா 2 படத்தை பிரம்மாண்டமாக எடுப்பதற்கு தயாரிப்பு நிறுவனமான கீதா ஆர்ட்ஸ் முடிவு செய்துள்ளது. தென்னிந்திய படங்கள் பான் இந்தியா படங்களாகவும், தென்னிந்திய நடிகர்களுக்கு பாலிவுட்டில் இருந்து அழைப்பு வருவதும் பிரமிக்க வைக்கிறது.
