Asianet News TamilAsianet News Tamil

Mollywood : உலகையே கலக்கும் மலையாள படங்கள்.. ஆனால் PVR-INOXல் வெளியாகாதது ஏன்? குழப்பத்தை உடைக்கும் பதில்கள்!

Mollywood Movies in PVR - INOX : இவ்வாண்டு துவக்கத்தில் இருந்து மலையாள மொழியில் வெளியாகும் அதிக அளவிலான படங்கள் உலக அளவில் மெகா ஹிட் படங்களாக மாறி வருகின்றன என்றால் அது மிகையல்ல.

why mollywood movies not getting screened in PVR INOX here is the reason behind it ans
Author
First Published Apr 12, 2024, 8:16 PM IST

ஆனால் மலையாள படங்கள் PVR-INOX திரையரங்குகளில் வெளியாவதில்லை ஏன் தெரியுமா? அது குறித்து இந்த பதிவில் காணலாம். தயாரிப்பாளரின் புதிய உள்ளடக்க விநியோக நிறுவனம் (PDC) தொடர்பாக PVR-INOX மற்றும் கேரள திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் (KFPA) இடையே பெரும் சர்ச்சை எழுந்துள்ளது என்பதை பற்றி நம்மில் பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. 

கேரளாவில் உள்ள திரையரங்குகள் பிடிசியை பிரத்தியேகமாக பயன்படுத்த வேண்டும் என்று KFPA (Kerala Film Producers Association) விரும்புகிறது, ஆனால் PVR-INOX அதை ஏற்கவில்லை. இதனால், PVR-INOX நிறுவனம் ஆட்சேபனைகளை எழுப்பி, கேரளாவில் மலையாளப் படங்கள் திரையிடுவதை மட்டுமின்றி, பிற மாநிலங்களில் டப்பிங் செய்து வெளியிடப்படும் படங்களையும் திரையிடுவதை நிறுத்தியுள்ளது. 

Vaadivaasal : கைவிடப்பட்டதா சூர்யாவின் வாடிவாசல்? புரளிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் வெற்றிமாறன்?

சரி இந்த PDCஐ கேரளா திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் நிறுவியது ஏன்?

KFPAன் படி, கேரளா மாநிலம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் QUBE, UFO மற்றும் Sony போன்ற தற்போதைய சேவை வழங்குநர்களால் விதிக்கப்படும் மெய்நிகர் அச்சு கட்டணத்தின் விகிதத்தை (Virtual Print Fee) குறைக்கத் தான் PDC அறிமுகப்படுத்தப்பட்டது. 

சரி VPF என்றால் என்ன?

விர்ச்சுவல் பிரிண்ட் கட்டணம் (VPF) என்பது மல்டிபிளக்ஸ்களில் திரைப்படங்களை திரையிடுவதற்கு QUBE போன்ற சேவை வழங்குநர்களுக்கு செலுத்தப்படும் கட்டணமாகும். கேரள திரைப்பட விநியோக சங்கத்தின் செயலாளர் சுப்ரமணியன் கூறுகையில், “QUBE, UFO, Sony மற்றும் பல சேவை வழங்குநர்கள் உள்ளனர். அவர்கள் PVR மற்றும் பிற மல்டிபிளக்ஸ் போன்ற திரையரங்குகளுக்கு விர்ச்சுவல் பிரிண்ட்களை வழங்குகிறார்கள். 

மேலும் VPF எனப்படும் கட்டணத்தை மிகையாக வசூலிக்கிறார்கள். சரியாக சொல்லப்போனால் ஒரு வாரத்திற்கு, 11,500 ரூபாய் வசூலிக்கின்றனர். நான்கு அல்லது ஐந்து திரைகள் கொண்ட மல்டிபிளக்ஸ் என்றால், 24,500 ரூபாய் வசூலிக்கின்றனர். அதாவது ஒரு கட்சிக்கு 450 ரூபாய் என்ற விகிதத்தில் வசூல் செய்கின்றனர். 

இதனால் தான் PVR-INOXல் மலையாள மொழி படங்கள் வெளியாகாமல் இருந்து வருகின்றது. ஆனால் எப்படி வெளியாகினாலும் தரமான வசூல் சாதனைகளை படைத்து வருகின்றது மோலிவுட் படங்கள். 

Gossip: 68 வயது தயாரிப்பாளரை பணத்துக்காக வளைத்து போட்ட.. 25 வயது இளம் நாயகி! கோலிவுட் ஹாட் டாப்பிக் இதாங்க!

Follow Us:
Download App:
  • android
  • ios