தற்போது சோசியல் மீடியாவில் பேசு பொருளாக மாறியுள்ள பீட்டர் பாலுடனான 3வது திருமணம் குறித்து வனிதா தனது யூ-டியூப் சேனல் நேரலையில் விளக்கமளித்துள்ளார். பீட்டர் பால் தன்னை விவாகரத்து செய்யாமல் வனிதாவை திருமணம் செய்து கொண்டதாகவும், அவர் ஒரு வேலை இல்லாதவர், குடிகாரர், பெண்களை ஏமாற்றுபவர் என்பது போல் அவருடைய முதல் மனைவி ஹெலன் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். அவை அனைத்திற்கும் வனிதா, மகளுடன் வந்து நேரலையில் விளக்கமளித்துள்ளார். 

எனக்கு பீட்டர் பாலை கடந்த 6 மாதமாக தெரியும். ஷங்கர் உடன்  “சிவாஜி” படத்தில் கூட விஷ்வல் எபெக்ட்ஸ் டைரக்டராக பணியாற்றியுள்ளார். 39 வயசில் இருக்கும் வனிதாவை யாராலும் ஏமாற்ற முடியாது. கடந்த ஏழரை வருஷத்திற்கும் மேலாக அவர் தனியாக தான் வசித்து வருகிறார். பீட்டர் பாலுக்கு ஏற்கனவே திருமணமாகியுள்ளது, அவருக்கு 2 குழந்தைகள் இருக்கிறது என எல்லாமே எனக்கு தெரியும். பீட்டர் பாலின் 2 குழந்தைகள் கூட என் பிள்ளைகளுடன் நல்ல நட்பாக இருக்கிறார்கள். பீட்டர் பாலுக்கும் ஹெலனுக்கும் இடையே சுத்தமாக பேச்சுவார்த்தை கிடையாது. 

 

இதையும் படிங்க: பிரவசத்திற்கு பின் ராதிகா மகளிடம் ஏற்பட்ட அதிரடி மாற்றம்... கடைசி போட்டோவை பார்த்தால் நீங்களே அசந்துபோவீங்க!

உங்களுக்கு எல்லாம் விவாகரத்து என்றால் என்னென்னு தெரியுமா?. எதுக்காக நீங்க எல்லாம் கமெண்ட் அடிக்கிறீங்க. உங்களுக்கு எல்லாம் ஏன் அவ்வளவு வாய். எதுவுமே தெரியாமல் ஏன் பேசுறீங்க?. கடந்த ஏழரை ஆண்டுகளாக புருஷன் என்ன செய்கிறார், எப்படி இருக்கார் என எதைப்பற்றியுமே ஹெலன் கவலைப்பட்டதில்லை. பீட்டர் பாலின் பேங்க் ஸ்டேட்மெண்டை ரிலீஸ் செய்யட்டுமா?. பீட்டர் பால் பிள்ளைகளுக்கு என்னவெல்லாம் செய்திருக்கிறார் தெரியுமா?. என அவரை விமர்சித்த நெட்டிசன்களை அடுக்கடுக்கான கேள்விகளால் துளைத்தெடுத்துள்ளார். 

 

எனக்கு என் குழந்தைகளை வளர்க்க நல்லாவே தெரியும். குழந்தை வளர்ப்பில் கருத்து கூற யாருக்கும் உரிமை இல்லை. நாங்க பிரச்சனையில் இருந்த போது யாரு வந்தீங்க?. என் குழந்தைகளை பார்த்துக்கொள்ள எனக்கு தெரியும், தேவையில்லாமல் நீங்கள் கமெண்ட் செய்ய வேண்டாம். என் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக அவங்க அப்பாவை பற்றியோ, விவாகரத்து பற்றியோ நான் வெளியே பேசவில்லை. பீட்டர் பால் ஒரு தங்கமான மனுஷன். ஹெலன் சொல்வது எல்லாம் உண்மையில்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 

 

இதையும் படிங்க: ஆபாச நடிகை மியா கலிஃபா தற்கொலை?... சோகத்தில் மூழ்கிய ரசிகர்களை நிம்மதி பெருமூச்சு விட வைத்த செய்தி...!

கள்ளத் தொடர்பு என்பது தினமும் நடக்கிறது, சினிமாக்காரர்கள் மட்டுமல்ல சாமானியர்களும் இரட்டை வாழ்க்கை நடத்துகிறார்கள். நான் அவரை காதலித்தேன். அவருடன் சேர்ந்து வாழ ஆசைப்பட்டேன். அதனால் தான் வீட்டில் வைத்து சிம்பிளாக திருமணம் செய்துகொண்டோம். வனிதா காதலிப்பதால் எனக்கு புருஷன் வேண்டும் என மீடியாவில் போய் பேசுவது வேடிக்கையாக இருக்கிறது. 4 வருஷமாக பிரிந்திருக்கும் ஹெலன் ஒருநாள் கூட சமாதானம் பேசாதது ஏன்?. போன் எடுக்கவில்லை என்பது எல்லாம் ஒரு காரணமா?. கணவனுக்காக நான் ஏற்கனவே சாலையில் இறங்கி போராடியிருக்கிறேன். தேவைப்பட்டால் மீண்டும் போராடுவேன். நான் தப்பு செய்தால்... ஆமா... தப்பு பண்ணேன்னு ஒத்துக்கிட்டு போற தில்லான ஆள். நீங்க சட்டப்படி போங்க. நாங்க அதை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம்.

 

நீங்க பத்தினின்னு நிரூபிக்க அவரை கலங்கப்படுத்தாதீங்க. அவர் அசைவம் கூட சாப்பிட மாட்டார். கல்யாணத்தன்று கூட ஆல்கஹால் இல்லாத ஒயிட் ஒயினை தான் குடித்தார். அதற்கான வீடியோ ஆதாரம் கூட என்னிடம் உள்ளது. ஏழரை வருஷத்து முன்னாடி அம்மா வீட்டுக்கு போனவங்க, பெட்டி படுக்கையோடு பிள்ளைகளை கூப்பிட்டுக்கொண்டு வந்து பீட்டர் பாலுடன்  சேர்ந்திருக்கலாமே?. ஏன் இத்தனை வருடங்களாக அதை செய்யவில்லை?. சும்மா நாடகம் போடாதீங்க. அடுத்த பிக்பாஸ் சீசனில் போட்டியாளராக கூட ஹெலனை களம் இறக்கலாம். ஏற்கனவே பிரபலமானவர்களின் பெயரை பயன்படுத்தி நீங்கள் பப்ளிசிட்டி தேடாதீங்க.

 

இதையும் படிங்க: "என் புருஷனுக்கு வனிதா பத்தோட பதினொன்னு"... பகீர் தகவலை வெளியிட்ட பீட்டர் பாலின் முன்னாள் மனைவி...!

ஹெலன் பேசுற உண்மையில்லாத விஷயங்களை வைத்துக்கொண்டு என்னை தவறாக நினைக்காதீங்க. நானும் ஒரு பெண் தான். நான் யாருடைய வாழ்க்கையையும் கெடுக்க மாட்டேன். சட்டப்படி என்ன செய்ய வேண்டும் என்பதை பீட்டர் பால் கவனித்து வருகிறார். தயவு செய்து என்னை பற்றி யோசிப்பதை விட்டுவிடுங்கள். எனக்கு இரண்டு பாகுபலி குழந்தைகள் இருக்காங்க. அதனால் என்னை பற்றி அவதூறாக பேசுவதை நிறுத்திக்கொள்ளுங்கள் என சற்றே கலங்கிய குரலுடன் முடித்துக்கொண்டார்.