ஜூன் 23 ஆம் தேதி நடைபெற இருந்த, நடிகர் சங்க தேர்தலை, தென் சென்னை மாவட்ட அனைத்து சங்க பதிவாளர் திடீர் என ரத்து செய்துள்ளார்.  இதனால் இந்த தேர்தலில் களமிறங்க இருந்த 'பாண்டவர் அணி' மற்றும் 'சுவாமி சங்கரதாஸ்' அணி என இரு அணியை சேர்ந்தவர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

எனவே இந்த தேர்தல் ரத்து செய்யப்பட காரணம், பாண்டவர் அணியை சேர்வார்கள் என பாக்யராஜ் அணியினரும், 'சுவாமி சங்கரதாஸ்' அணி என நாசர் அணியை சேர்ந்தவர்களும் மாறி மாறி குறை கூறி வருகிறார்கள். 

இந்நிலையில் நடிகர் சங்க தேர்தல் ரத்து செய்யப்பட்டது அதிர்ச்சியளிக்கும் வகையில் இருப்பதாக நடிகரும், இயக்குனருமான பாக்யராஜ் தெரிவித்துள்ளார். இது குறித்து பிரபல செய்தி தொலைக்காட்சி ஒன்றில் பேசிய அவர், இந்த செய்தி தனக்கு இப்போது தான் தெரியும், இன்று இரவு மதுரை கிளம்புவதாக இருந்தோம் ஆனால் இப்படி நடந்திருப்பது தனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது.

பதிவாளரின் இந்த திடீர் முடிவு குறித்து, எங்கள் அணியினருடன் ஆலோசித்து விட்டு கருத்து தெரிவிப்பேன் என்றும்,  சங்க கட்டட கட்டுமான பணிகளை பாண்டவர் அணியினர் முடிக்காததாலும், சொன்ன வார்த்தைகளை காப்பாற்ற வில்லை என்பதாலும் தான் இம்முறை அவர்களுக்கு எதிராக நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடுவதாக கூறினார்.