- Home
- Cinema
- தொலைக்காட்சி
- ஜனனியின் ஃபுட் டிரக் பிசினஸை இழுத்து மூட அரசியல்வாதிகளை ஏவிவிடும் குணசேகரன் - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
ஜனனியின் ஃபுட் டிரக் பிசினஸை இழுத்து மூட அரசியல்வாதிகளை ஏவிவிடும் குணசேகரன் - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஜனனியின் ஃபுட் டிரக் பிசினஸை இழுத்து மூட ஆதி குணசேகரன் அரசியல்வாதிகளை களத்தில் இறக்கி இருக்கிறார். இதையடுத்து என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

Ethirneechal Thodargiradhu Serial Today Episode
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஜனனி தொடங்கி இருக்கும் தமிழ் சோறு என்கிற ஃபுட் டிரக் பிசினஸ் படிப்படியாக பிக் அப் ஆகி வரும் நிலையில், அதற்கு தினசரி குடைச்சல் கொடுக்க ஒவ்வொரு ஆளாக வந்த வண்ணம் உள்ளனர். அந்த வகையில் நேற்றைய எபிசோடில், இவர்கள் கடைக்கு எதிரே ஒருவர் பிரியாணி கடை போட்டு தொல்லை கொடுத்தார். மேலும் இந்த இடத்தில் இத்தனை நாட்களாக நான் தான் கடைபோட்டு வந்தேன். அதனால் இங்கிருந்து கிளம்ப முடியாது என ஜனனியுடன் சண்டையும் போட்டிருக்கிறார் அந்த நபர். இந்த நிலையில், இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
ஜனனி பிசினஸுக்கு வந்த புது சிக்கல்
பிரியாணி கடைக்காரர் பிரச்சனை முடிவதற்குள் மற்றொரு நபர் வெள்ளையும் சொள்ளையுமாக எண்ட்ரி கொடுக்கிறார். அவர் அந்த ஏரியா கவுன்சிலராம். அங்கு வந்து சக்தியிடம், என்ன தம்பி, குணசேகரன் அண்ணனை வீட்டை விட்டு வெளிய அனுப்பிட்டு, பொம்பளைங்களுக்கு சப்போர்ட் பண்ணி கடை போட்டுகிட்டு இருக்கியா என கேட்க, குறுக்கிட்டு பேசும் ஜனனி, ஆமா அப்படி தான் சப்போர்ட் பண்ணுவாரு, அதுக்கு என்ன இப்போ, போய் அங்க நின்னு பிரச்சனை பண்ணுங்க, கலாட்டா பண்ணுங்கனு சொல்லி அனுப்பினாரா அந்த ஆளு என கேட்கிறார் ஜனனி.
காலி பண்ண சொல்லும் கவுன்சிலர்
அதற்கு அவர், யம்மா நான் இந்த ஏரியா கவுன்சிலர், எனக்கு யாரு சொல்லி அனுப்பனும், நான் பக்கத்து ரோட்ல தான் கடையை போட்டிருக்கேன். வர்றப்போ பாத்திருப்பீங்களே, சுடலையாண்டி ஃபுட் டிரக், அது என்னுடையது தான் என அவர் சொல்ல, அதற்கு பதிலடி கொடுக்கும் நந்தினி, இருந்துட்டு போகட்டும், நாங்க என்ன வேற எங்கயாச்சும் இருந்து திருடிட்டு வந்தா கடை போட்டிருக்கோம் என சொல்கிறார். இதற்கு அந்த கவுன்சிலர், என்னம்மா நீ அரவேக்காட்டுத்தனமா பேசிட்டு இருக்க, நானும் இதே சோத்து வியாபாரம் தான் பண்ணிகிட்டு இருக்கேன். நீ எனக்கு போட்டியா கடையை போட்டா பேசாம போயிடுவேனா... எல்லாத்தையும் காலி பண்ணிட்டு கிளம்புங்க என மிரட்டுகிறார்.
கவுன்சிலர் போடும் டீலிங்
அதற்கு ஜனனி, முடியவே முடியாது என சொல்வதோடு, நாங்க சட்டப்படி எல்லா ரூல்ஸையும் பாலோ பண்ணி தான் இங்க கடை போட்டிருக்கோம் என சொல்கிறார். அப்படியா அப்போ ஒன்னு செய்யுங்க, உங்க கடை போர்டை கழட்டி தூக்கி போட்டுட்டு, சுடலையாண்டி ஃபுட் டிரக்னு போர்டை மாட்டிட்டு வியாபாரம் பண்ணுங்க, வர்ற லாபத்தில் 20 சதவீதம் எனக்கு கொடுத்துட்டு, மீதமுள்ளதை நீங்க எடுத்துக் கோங்க என டீல் பேசுகிறார் அந்த கவுன்சிலர். என்ன விளையாடுறீங்களா, இது நாங்க உருவாக்குன பிராண்டு, கடைசி வரைக்கும் எங்க பேரில் தான் இந்த கடையை நடத்துவோம் என திட்டவட்டமாக கூறுகிறார் ஜனனி.
பிரச்சனை வெடிக்கப்போகுது
மறுபுறம் குமார் வீட்டில் உள்ள குணசேகரன், கதிரை கேசில் இருந்து வெளியே கொண்டுவருவது பற்றி பேசுகிறார். அதற்கு குமார், அதெல்லாம் நான் பாத்துக்கிறேன் என சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார். பின்னர் தன் தம்பிகளிடம் பேசும் குணசேகரன், ஜனனி கலெக்டரை போய் பாத்திருக்கால்ல, அவ ஒன்னு செய்வா, அதை எதிர்த்து குமார் ஒன்னு செய்வான். ரெண்டும் மோதும்போது பிரச்சனை பெருசா வெடிக்கும் என கூறுகிறார் குணசேகரன். இதனால் இனி மிகப்பெரிய பிரச்சனை வெடிக்கப் போகிறது என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது. அது என்ன என்பதை இனி வரும் எபிசோடில் பார்க்கலாம்.

