Vijay Antony : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும், இசையமைப்பாளராகவும் திகழ்ந்து வரும் ஒரு கலைஞன் தான் விஜய் ஆண்டனி.

நாகர்கோயிலில் கடந்த 1975ம் ஆண்டு ஜூலை மாதம் 24ம் தேதி பிறந்த பிரபல நடிகர் மற்றும் இசையமைப்பாளர் தான் விஜய் ஆண்டனி. கடந்த 2005 ஆம் ஆண்டு தமிழில் வெளியான "சுக்கிரன்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் திரை உலகில் களமிறங்கிய விஜய் ஆண்டனி, கடந்த 2012ம் ஆண்டு தமிழில் வெளியான "நான்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் கதையின் நாயகனாக பயணிக்க தொடங்கினார். 

கடந்த 12 ஆண்டுகளுக்கு மேல் சிறந்த நடிகராகவும், கடந்த 19 ஆண்டுகளாக சிறந்த இசையமைப்பாளராகவும் தமிழ் திரையுலகில் பயணித்து வரும் விஜய் ஆண்டனி நடிப்பில் இறுதியாக இந்த 2024 ஆம் ஆண்டு "ரோமியோ" என்கின்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 

கார்த்திகை தீபம் சீரியல் : தீபாவை கொல்ல பிளான் போட்டது யார்? கார்த்திக்கு தெரிய வரும் திடுக்கிடும் உண்மை

அதேபோல கடந்த 2023 ஆம் ஆண்டு விஜய் ஆண்டனி அவர்களே நடித்து வெளியான பிச்சைக்காரன் 2 திரைப்படத்தில் இசையமைப்பாளராகவும் அவர் பணியாற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 19ஆம் தேதி விஜய் ஆண்டனியின் மூத்த மகள் அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒட்டுமொத்த திரையுலகத்தையே உலுக்கியது.

அந்த துக்கத்தில் இருந்து மீண்டும் இப்பொது தனது பயணத்தை துவங்கியுள்ள விஜய் ஆண்டனி, அதன் பிறகு பல பொது நிகழ்ச்சிகளில் காலில் காலணி அணியாமல் தான் பங்கேற்று வருகின்றார். இது குறித்து விஜய் ஆண்டனி அவர்களிடம் கேட்ட பொழுது நான் எப்பொழுது கால்களில் செருப்பு இல்லாமல் பயணிக்க ஆரம்பித்தேனோ அன்று முதல் எனக்கு எந்த விதமான நெருக்கடியான சூழலும் இதுவரை ஏற்படவில்லை. 

என் வாழ்நாள் முழுவதும் இப்படி இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன் அதனால் தான் நான் காலணிகளை அழிவதில்லை. அதுமட்டுமல்லாமல் இது எனக்கு உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் சந்தோஷத்தை தருகிறது என்று அவர் கூறியிருக்கிறார்.

Rajinikanth: இமயமலையில் உள்ள பாபா குகையில் தியானம் செய்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்! வைரலாகும் புகைப்படங்கள்!