- Home
- Gallery
- கார்த்திகை தீபம் சீரியல் : தீபாவை கொல்ல பிளான் போட்டது யார்? கார்த்திக்கு தெரிய வரும் திடுக்கிடும் உண்மை
கார்த்திகை தீபம் சீரியல் : தீபாவை கொல்ல பிளான் போட்டது யார்? கார்த்திக்கு தெரிய வரும் திடுக்கிடும் உண்மை
கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடில் ரம்யா கார்த்திக்கிடம் பிசினஸ் விஷயமாக பெங்களூர் அழைத்திருந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

Karthigai deepam serial
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ரம்யா கார்த்திக்கிடம் பிசினஸ் விஷயமாக பெங்களூர் அழைத்திருந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது ரம்யா கார்த்திக்கை பெங்களூருக்கு தன்னுடன் வர சொல்ல அவனும் சம்மதம் தெரிவிக்கிறான்.
Zee Tamil Karthigai deepam serial
அடுத்து அபிராமியும் மீனாட்சியும் தீபாவுக்கு அடுத்தடுத்து நடக்கும் விஷயங்களால் கோவிலுக்கு வந்து அவளுக்கு பதிலாக விளக்கு போட்டு ஏலம் விடப்படும் அம்மன் புடவையை வாங்கிட்டு போக வந்துள்ளனர். தீபாவுக்காக பரிகாரத்தை நான் செய்யலாமா என்று அபிராமி கேட்க அவளுடைய புருஷன் கார்த்திக் தான் செய்யணும் என்று சொல்கிறார்.
இதையும் படியுங்கள்... 1 மணி நேரத்துல உன் வேலைக்கு ஆப்பு வைக்குறேன்டா... முத்துப்பாண்டியிடம் சவால் விட்ட பரணி - அண்ணா சீரியல் அப்டேட்
Karthigai deepam serial Update
மறுபக்கம் கார்த்திக் தீபா குடித்த ஜூஸை லேப் டெஸ்ட்க்கு அனுப்பி வைத்திருந்த நிலையில், அதன் ரிசல்ட் குறித்து விசாரிக்க வந்திருக்க, அதில் ஒரு மாத்திரை கலந்து இருந்ததும், அதை சாப்பிட்டால் கொஞ்சம் நேரத்திற்கு சைக்கோ போல் நடந்து கொள்வார்கள் என்பதையும் சொல்ல, கார்த்திக் யார் இந்த வேலையை செய்திருப்பா என்று கன்பியூஸ் ஆகிறான்.
இதையெல்லாம் ரம்யாவும் மறைந்திருந்து பார்க்கிறாள், பிறகு கார்த்திக் அங்கிருந்து சென்றதும் ரிசப்ஷனில் இருப்பவருக்கு பணத்தை கொடுத்து நடந்தவற்றை தெரிந்து கொள்ள, கார்த்திக் போனை இங்கேயே மறந்து வைத்திட்டு சென்றிருக்க அவன் திருப்பி வர, ரம்யா மீண்டும் மறைந்து கொள்கிறாள்.
Karthigai deepam serial Today Episode
அதன் பிறகு அபிராமி கோவிலில் மீனாட்சியிடம் ரம்யாவோட அப்பாவுக்கு உடம்பு சரியில்லைன்னு சொன்னாங்க, நீ அவங்க வீட்டு அட்ரஸ் கேளு, நாம போய் பார்த்திட்டு வந்துடலாம் என்று சொல்ல, மீனாட்சியும் அட்ரஸ் கேட்டு வாங்க இவர்கள் ரம்யா வீட்டிற்கு கிளம்பி செல்கின்றனர்.
மறுபக்கம் ரம்யா கார்த்திக்கிடம் இருந்து மோதிரத்தை வாங்கியவனை வீட்டிற்கு அழைத்து பணத்தை கொடுத்து கார்த்திக்கு கொடுத்த மோதிரத்தை திரும்ப வாங்கி கொள்கிறாள், இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை மிஸ் பண்ணாம பாருங்க.
இதையும் படியுங்கள்... வாயை விட்டு சிக்கிய ரோகிணி..! க்ரிஷுக்கு தெரியவந்த உண்மை... மீனா - முத்துவிடம் இதை சொல்வாரா?