தீவிரமாக நடக்கும் 'அருவா' பட நாயகி வேட்டை! லிஸ்டில் இடம்பிடித்த இரு நடிகை..! இயக்குனர் ஹரி வைத்த புதிய ட்விஸ்ட
நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள 'சூரரை போற்று' திரைப்படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், அடுத்த படத்திற்கு தீவிரமாக தயாராகி வருகிறார் நடிகர் சூர்யா.
நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள 'சூரரை போற்று' திரைப்படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், அடுத்த படத்திற்கு தீவிரமாக தயாராகி வருகிறார் நடிகர் சூர்யா.
அந்த வகையில் அடுத்ததாக இயக்குனர் ஹரியின் வெற்றி கூட்டணியில் ஆறாவது முறையாக சூர்யா கைகோர்க்க உள்ள திரைப்படம் 'அருவா'. இந்த படம் பற்றி ஏற்கனவே அதிகார பூர்வ அறிவிப்பு வெளியாகி, படத்தின் முன் ஏற்பாடு பணிகள் நடந்து வருகிறது.
இது ஒரு புறம் இருக்க, இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடிக்க உள்ள நடிகையை தேர்வு செய்வது குறித்த பேச்சுவார்த்தைகளும் சூடு பறக்கிறது.
அந்த வகையில், இந்த படத்தில் சூர்யாவிற்கு, ஜோடியாக நடிக்க வைக்க, ரஷ்மிக்கா மந்தனா மற்றும் மாளவிகா மேனன் ஆகியோருடன் பேச்சு வார்த்தை நடத்த படக்குழு முடிவு செய்து லிஸ்டில் வைத்திருப்பதாகவும். ஆனால் புது நாயகிக்கு வாய்ப்பு கொடுக்க இயக்குனர் ஹரி, செய்து ட்விஸ்ட் வைத்துள்ளார்.
எது எப்படி இருந்தாலும், சூர்யாவின் ஜோடியாக நடிக்க உள்ள நடிகை பற்றிய தகவல் விரைவில் வெளியாகும் அதுவரை காத்திருப்போம்.