பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, பிரபலமாகும் அனைவருக்கும் அவர்கள் எதிர்பார்த்தது போல் பட வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. கதையை தேர்வு செய்து நடிக்கும் பிரபலங்கள், கிடைக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்டு, பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றிபெறவில்லை என்றாலும், கேரியரில் வெற்றி பெறுகிறார்கள்.

மேலும் செய்திகள்: தலைவரை காப்பி அடித்த சூர்யா..! வானத்தில் பறக்க தயாராக இருக்கும் சூரரை போற்று விமானம்!
 

அந்த வகையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை வெற்றி பெற்ற ஆரவ், ரித்விகா, முகேன் ஆகியோர் இதுவரை திரையுலகில் சரியான இடத்தை பிடிக்கவில்லை என்றாலும், ஹரீஷ் கல்யாண், ரைசா ஆகியோர் நாயன், நாயகியாக ஜெயித்து விட்டனர்.

இவர்கள் இருவரின் நடிப்பில் வெளியான 'பியர் பிரேமா காதல்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து இருவரும் அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்: 100 மாணவர்கள் ஆசையை நிறைவேற்றிய சூர்யா! விமானத்தில் பறந்தபடி வெளியான 'சூரரை போற்று' பாடல்! புகைப்பட தொகுப்பு!
 

அந்த வகையில் பிக்பாஸ் ரைசா தற்போது, ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக 'காதலிக்க நேரமில்லை' என்கிற படத்தில் நடித்து வருகிறார். இது ஒரு புறம் இருக்க, ஜி.வி.பிரகாஷ் தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டு புலம்பி தள்ளியுள்ளார்.

இந்த வீடியோவில்... ரைசா தான் ரிலேஷின்ஷிப்பில் உள்ள நபர் பற்றி, காதலர் தினமான நாளை அறிவிக்க உள்ளதாக கூறியுள்ளதாகவும், அவர் யாராக இருக்கும் ? என கேள்வி எழுப்பி பொறுத்திருந்து பார்ப்போம் என தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்: நாயகியானதும் அடங்காத ஓவர் அலம்பல்! சுண்டி இழுக்கும் லாஸ்லியாவின் வெறித்தன கிளிக்ஸ்!

ஒரு வேலை... ரைசா நாளை 'காதலிக்க நேரமில்லை' படம் பற்றிய தகவலை வெளியிடுவாரா? அல்லது உண்மையிலேயே தான் காதலித்து வரும் நபர் பற்றி சொல்வாரா? நாமும் பொறுத்திருந்து பார்ப்போம்...  

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Cutie pie ❤️ @gvprakash 💝

A post shared by Raiza Wilson (@raizawilson) on Feb 12, 2020 at 9:49pm PST