கடந்த சில ஆண்டுகளாக தோல்வியை சந்தித்து வந்த நடிகர் ஆர்யாவுக்கு தற்போது பெண்பார்க்கும் படலம் தீவிரமாக நடந்து வருகிறது. இதற்காக புதியதாக வந்துள்ள தமிழ் தொலைக்காட்சி ஒன்று மும்பரமாக இறங்கியுள்ளது.  

மலையாள தொலைகாட்சியில் ஒரு நிகழ்ச்சியும் அடுத்து அவருக்கு பெண் தேடும் படலம் என்ற பெயரில் ஒரு டிவி நிகழ்ச்சி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றதால் புதியதாக தொடங்கப்பட்ட தனியார் தொலைக்காட்சி ஒன்று நம்ம வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியை அறிவித்துள்ளது.

இதனையடுத்து, முதல் முயற்சியாக  ஆர்யா தன் வருங்கால மனைவியை தேடும் விதத்தில் “எங்க வீட்டு மாப்பிள்ளை” என்ற ரியாலிட்டி ஷோவில் பங்கேற்று வருகிறார். அதில் துவக்கத்தில் 16 போட்டியாளர்கள் இருந்த நிலையில் தற்போது பலரும் வெளியேற்றப்பட்டு வெறும் 8 பெண்கள் மட்டுமே போட்டியில் உள்ளனர்.

இந்நிலையில், நாளை மேலும் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படவுள்ளார். அகதா அல்லது குஹாசினி ஆகிய இருவரில் ஒருவர் இன்று வெளியேற்றப்படுவார்கள் என டீசரில் காட்டப்பட்டது.

மேலும் குஹாசினி வெளியேற்றப்பட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. “இவர் ஆர்யாவை திருமணம் செய்துகொள்வதற்காக இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை. கேமரா முன்பு எப்போதும் போலியாக நடிக்கிறார்” என மற்ற பெண்கள் இவர் மீது இன்று குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது.