கொரோனா பிரச்சனையால் திரைத்துறை கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகிறது. திறக்கபடாத தியேட்டர்கள், முழுவதுமாக முடிந்த பிறகும் திரைக்கு வர முடியாத திரைப்படங்கள், பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படப்பிடிப்பு என பல பிரச்சனைகள் சுழட்டி அடிக்கிறது. கடன் வாங்கி படம் எடுத்த தயாரிப்பாளர்கள் பலரும் கொஞ்சமாவது சம்பளத்தை குறைத்துக்கொள்ளுங்கள் என டாப் ஹீரோ, ஹீரோயினுக்கு கோரிக்கை வைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 

 

மறுபுறமே தியேட்டர் உரிமையாளர்களின் நிலை மிகவும் மோசமான நிலைக்கு சென்றுள்ளது. அதாவது தியேட்டர்களை நம்பி பிழைத்து வரும் 10 லட்சம் குடும்பங்களை எப்படியாவது காப்பாற்றுங்கள் என முதலமைச்சரிடம் கதறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 

 

 

இதையும் படிங்க: டீப் நெக் ஓபனில் கவர்ச்சி அதிர்ச்சி... வைரலாகும் யாஷிகா ஆனந்தின் ஓவர் தாராளம்...!

கடந்த மார்ச் மாதம் முதல் 160 நாட்களுக்கும் மேலாக தியேட்டர்கள் திறக்கப்படாமல் உள்ளதால், பொன்மகள் வந்தாள், பெண் குயின் ஆகிய படங்கள் ஓடிடியில் வெளியானது. மேலும்  பல படங்கள் ஆன்லைனில் வெளியாக உள்ள நிலையில், தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோவான சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படம் ஆன்லைன் தளத்தில் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது தியேட்டர் உரிமையாளர்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. 

 

 

இதையும் படிங்க: ரஜினியைத் தொடர்ந்து அஜித்... கருப்பு மாஸ்குடன் காரில் குடும்பத்துடன் பயணிக்கும் வீடியோ...!

இந்நிலையில் செய்தி மற்றும்  விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூவிடம் தியேட்டர்கள் திறக்கப்படுவது எப்போது என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், தியேட்டர்களை எப்போது திறக்கலாம் என்பது குறித்து மத்திய அரசு செப்டம்பர் 1ம் தேதி ஆலோசனை நடத்த உள்ளதாகவும், அதன் பின்னர் மத்திய அரசு கூறும் வழிகாட்டுதலை பயன்படுத்தி தமிழகத்தில் தியேட்டர்கள் திறக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.