கடந்த மாதம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போயஸ் கார்டனில் இருந்து கேளம்பாக்கத்தில் உள்ள தனது பண்ணை வீட்டிற்கு லம்போர்கினி காரில் மாஸ்க் அணிந்து மாஸாக பயணம் செய்த போட்டோஸ் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலானது. லாக்டவுன் நேரத்தில் கிடைத்த ரஜினிகாந்தின் தரிசனத்தால் ரசிகர்கள் அந்த போட்டோவை வேற லெவலுக்கு வைரலாக்கினர். 

இதையடுத்து தற்போது தல அஜித்தின் வீடியோ ஒன்று வெளியாகி தாறுமாறு வைரலாகி வருகிறது. நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து அஜித் - போனிகபூர் - ஹெச்.வினோத் கூட்டணி வலிமை படத்திற்காக மீண்டும் கைகோர்த்துள்ளது. இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பு மட்டுமே பாக்கியுள்ள நிலையில், கொரோனா தொற்று பிரச்சனை காரணமாக ஐதராபாத்தில் நடைபெற்று வந்த ஷூட்டிங் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. 

லாக்டவுன் காலத்தில் தனது குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவிட்டு வரும் அஜித், கடந்த மே மாதத்தில் தனது மனைவியுடன் மருத்துவனை சென்ற வீடியோ வெளியாகி வைரலானது. மூன்று மாதங்களுக்கு ஒருமுறை உடல் பரிசோதனை செய்து கொள்ளும் அஜித், அதற்காகத்தான் மருத்துவமனை சென்றிருந்தார் என்றும் அப்போது அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

 

இதையும் படிங்க: டீப் நெக் ஓபனில் கவர்ச்சி அதிர்ச்சி... வைரலாகும் யாஷிகா ஆனந்தின் ஓவர் தாராளம்...!

தற்போது தல அஜித், மனைவி ஷாலினியுடன் கருப்பு மாஸ்க் அணிந்த படி காரில் ஏறி பயணிக்கும் வீடியோ சோசியல் மீடியாவில் வெளியாகி தாறுமாறு வைரலாகி வருகிறது. லாக்டவுன் நேரத்தில் அஜித்தை பார்த்த சந்தோஷத்தில் இருக்கும் ரசிகர்கள் இந்த வீடியோவை வேற லெவலுக்கு வைரலாக்கி வருகின்றனர். இதோ அந்த வீடியோ...