கடந்த வாரத்தில், நடிகர் ஷாம் உட்பட 13 பேரை, போலீசார் சூதாட்டத்தில் ஈடுபட்டதற்காக கைது செய்ததாக வெளியான தகவல், கோலிவுட் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது இது குறித்து முதல் முறையாக நடிகர் ஷாம் உண்மையில் நடந்தது என்ன என்பதை கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்: நடிகர் மாதவன் வீட்டில் இப்படியெல்லாம் செய்து வைத்திருக்கிறாரா..! பிரமாண்ட வீட்டை பார்க்கலாம் வாங்க!
 

தமிழில், தளபதி விஜய் நடித்த 'குஷி' படத்தின் மூலம் ஒரு சிறு கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் ஷாம். பின்னர் 12பி , ஏய் நீ ரொம்ப அழகா இருக்க, லேசா லேசா, இயற்க்கை, உள்ளம் கேட்குமே, உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார். இவருக்கென தனி ரசிகர்களும் உள்ளனர்.

தமிழை தவிர, தெலுங்கு, கன்னடம். மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். மேலும் கடந்த 2013 ஆண்டு வெளியான 6 மெழுகு வத்திகள் படத்தை தயாரித்து நடித்திருந்தார். 

மேலும் செய்திகள்: அயோத்தியில் உள்ள அனுமன் கோவிலில் வழிபட்ட பிரதமர் மோடி..! புகைப்பட தொகுப்பு..!
 

இந்நிலையில் கடந்த வாரம் நடிகர் ஷாம், அவருக்கு சொந்தமாக சென்னை நுங்கம்பாக்கம், ஸ்டெர்லிங் சாலையில் அமைந்துள்ள அடுக்கு மாடி குடியிருப்பில், அடிக்கடி பணம் வைத்து சீட்டு விளையாடி, சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததாகவும். ஜூலை 27 அன்று போலீசார் திடீர் என, நடிகர் ஷாமுக்கு சொந்தமாக உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் உள்ள வீடுகளை திடீர் என சோதனை செய்தனர். அதில் ஒரு வீட்டில் நடிகர் ஷாம் உட்பட 13 பேர், சீட்டு விளையாடி சூதாட்டத்தில் ஈடுபட்டதால் கைதுசெய்யப்பட்டதாக தகவல் வெளியானது.


 
அதே போல் இவர்களிடம் இருந்து, அவர்கள் வைத்து விளையாடிய பணம் மற்றும் சீட்டு கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் குறித்து தொடர்ந்து போலீசார் விசாரணை செய்த போது, இங்கு சீட்டு விளையாடுவதற்காக பல இயக்குனர்கள், நடிகர்கள், தொழிலதிபர்கள் வருவது வழக்கம் என்று, இந்த வீட்டை நடிகர் ஷாம், சூதாட்ட கிளப் போல் வைத்திருந்ததாகவும் தகவல் பரவியது.

மேலும் செய்திகள்: ஜோதிகா என்ன சுத்தமா? சூர்யாவை கல்யாணம் செஞ்ச அப்புறம் தான் இப்படி... வாயை விட்டு வாங்கி கட்டும் மீரா மிதுன்!
 

பின்னர் இவர்களை போலீசார் சொந்த ஜாமினில் விடுதலை செய்ததாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், இதுகுறித்து தற்போது விளக்கம் கொடுத்துள்ள நடிகர் ஷாம், இப்படி வெளியான தகவல்கள் முற்றிலும் வதந்தி என்றும், லாக் டவுன் நேரம் என்பதால், சாதாரணமாக நண்பர்களுடன் சேர்ந்து, சீட்டுக்கட்டு விளையாடினோம். ஆனால் பணம் வைத்து விளையாடவில்லை. அதற்கும் பல வதந்திகள் கிளம்பிவிட்டது.

போலீசார் வந்து சோதனை செய்தபின், இங்கு எதுவும் கிடைக்காததால், காவல் நிலையத்திற்கு வந்து கையெழுத்து போடுமாறு கூறினர். அதுவும் 5 நிமிடத்தில் முடித்து வீடு திரும்பிவிட்டதாக கூறியுள்ளார்.