தற்போது இருக்கும் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு போட்டியாக பாரதிராஜா தலைமையில் புதிய சங்கம் தொடங்கப்பட்டுள்ளது. அந்த சங்கத்திற்கு 'தமிழ்த் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்கம்' என்று பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதில் இணைந்துள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாகவும் தயாரிப்பாளர் சங்கத்தின் முன்னாள் செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 

 

இதையும் படிங்க: துளி கூட குறையாத அழகுடன்... 25 வருடத்திற்கு பிறகு தமிழில் ‘கம்பேக்’ கொடுக்கும் பிரபல நடிகை...!

இந்த ஆலோசனை கூட்டத்திற்கு தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அதில் பேசிய கலைப்புலி எஸ். தாணு, தான் பதவிக்கு வர வேண்டும் என்ற நோக்கத்துடன் இல்லை என்றும், பாரதிராஜா ஒப்புக்கொண்டு சமாதானத்திற்கு வந்தால் மற்ற பதவிகளுக்கு மட்டும் தேர்தலை நடத்திக் கொண்டு, தலைவர் பதவிக்கு அவரையே ஒருமனதாக போட்டியின்றி தேர்வு செய்ய தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார். அவர் என்ன நன்மைகள் செய்ய வேண்டும் என நினைக்கிறாரோ, அதை எல்லாம் செய்யட்டும். அவர் காலம்  பொற்காலம் என்று சொல்லும் அளவிற்கு அனைத்தையும் செய்யட்டும் என கோரிக்கை வைத்தார். 

 

இதையும் படிங்க: படுக்கையில் ஆண் நண்பருடன் அமலா பால்... பீர் பாட்டிலுடன் பார்ட்டி கொண்டாட்டம்... சர்ச்சையை கிளப்பும் போட்டோஸ்!

தொடர்ந்து பேசிய தாணு, உங்க காலில் விழுந்து மன்றாடி கேட்டுக்கொள்கிறேன். தயவு செய்து நமக்குள் பிளவு வேண்டாம். உங்களை தலை மேல் வைத்து கொண்டாடுவோம். எல்லாரும் ஒரு தாய் மக்களாய் வாழ்வோம் என வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் பாரதிராஜா தவறு செய்யவில்லை என்றும், அவருடன் இருக்கும் 4 பேர் தான் இந்த சூழலுக்கு அவரை தள்ளியதாகவும் குற்றச்சாட்டியுள்ளார்.