இயக்குனர் அன்பரசன், திரைகதை, வசனம், எழுதி இயக்கியுள்ள திரைப்படம் 'வால்டர்'. இந்த படத்தில் நடிகர், சத்யராஜின் மகன் சிபிராஜ் அதிரடி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.

கிரைம் த்ரில்லராக உருவாகியுள்ள இந்த படத்தை,  ஸ்ருதி திலக் 11:11 புரோடக்க்ஷன் பிரைவேட் லிமிடெட் சார்பில் தயாரித்துள்ளார். 

மேலும், இந்த படத்தில் சமுத்திரக்கனி, நடராஜன் சுப்பிரமணியன், ஷிரின் காஞ்சவாலா, சனம் ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ள நிலையில்,போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

விரைவில் வெளியாக உள்ள இந்த படத்தில் இருந்து, பாடகி சித்ரா பாடியுள்ள அழகிய காதல் வரிகளை கொண்ட 'யாரை தேடி' பாடலின் லிரிக்கல் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

அந்த பாடல் இதோ...