இந்த புகழுடன் சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கும் அடியெடுத்து வைத்த  விஜே ரம்யா, வனமகன், ஓகே கண்மணி, கேம் ஓவர், ஆடை உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். 

அத்துடன், சமுத்திரக்கனி நடிக்கும் சங்கத் தலைவன் மூலம் ஹீரோயினாகவும் அறிமுகமாகவுள்ளார். தற்போது, விஜய்யின் தளபதி64 படத்தில் நடித்துவரும் விஜே ரம்யா, படப்பிடிப்பு இல்லாத நாட்களில் இசை வெளியீட்டு விழா போன்ற நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார். 

அதுமட்டுமல்லாமல், விதவிதமான ஆடைகளில் ஃபோட்டோ ஷுட் நடத்தி, அந்த புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்வதையும் பொழுதுபோக்காகக் கொண்டுள்ளார்.

அந்த வகையில், தற்போது வெள்ளைநிற புடவையில் கொள்ளை அழகில் மயக்கும் புகைப்படங்களை, தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். விதவிதமான போஸ்களில் ஹோம்லி லுக்கில் அசரடித்திருக்கும் விஜே ரம்யாவின் இந்த புகைப்படங்கள், ரசிகர்களின் லைக்குகளை அள்ளி வருகிறது.