பாண்டியன் ஸ்டோர் சீரியல் மூலமாக புகழின் உச்சம் தொட்ட விஜே சித்ரா, நேற்று அதிகாலை நசரத்பேட்டையில் தான் தங்கியிருந்த ஓட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தொழிலதிபர் ஹேமந்த் ரவியுடன் சித்ராவிற்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில், அவருடன் தான் அறையெடுத்து தங்கியுள்ளார். இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில்  இருவரும் கடந்த அக்டோபர் மாதமே பதிவு திருமணம் செய்துவிட்டதாக  ஹேமந்த் கூறியுள்ளார். 

 

இதையும் படிங்க: இரவு முழுவதும் செம்ம ஹேப்பியாக இருந்த சித்ரா... அதிகாலையில் தற்கொலை செய்து கொண்டது ஏன்?

இந்த தகவலின் படி, சித்ராவிற்கு திருமணமாகி 2 மாதங்கள் மட்டுமே நிறைவடைந்துள்ளதால் முகப்பேர் மேற்கு கோட்டாச்சியர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விஜே சித்ராவின் உடலை நேற்றே போலீசார் கைப்பற்றி கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஒப்படைத்தனர். இருப்பினும் இன்றே உடற்கூராய்வு நடைபெறும் என தகவல்கள் வெளியானது. 

 

இதையும் படிங்க: ஹேமந்த் உடனான திருமணத்தை நிறுத்த நினைத்தாரா சித்ரா?... அடுத்தடுத்து அதிர்ச்சியை அதிகரிக்கும் தகவல்கள்...!

அதன்படி இன்னும் சற்று நேரத்தில் ஆர்.டி.ஓ., போலீசார் முன்னிலையில் சித்ராவின் உடற்கூராய்வு தொடங்க உள்ளது. சித்ராவின் மரணம் தற்கொலையா? கொலையா? என பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ள நிலையில் பிரதேச பரிசோதனை அறிக்கை மட்டுமே போலீசாரின் தற்போதைய நம்பிக்கையாக உள்ளது. உடற்கூராய்வு முடிவை வைத்தே சித்ராவின் மரணத்தில் உள்ள பல ரகசியங்களை போலீசார் கண்டறிய முடியும் என்பதால், சித்ராவின் உறவினர்கள், ரசிகர்கள், சக நடிகர்கள் என பலரும் பிரதேச பரிசோதனை அறிக்கையின் முடிவிற்காக காத்திருக்கின்றனர்.