கடந்த வாரம் அஜித் ரசிகர்களின் மிக பெரிய எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளிவந்த விவேகம் படம், நாளுக்கு நாள் மற்ற திரைப்படங்களின் சாதனையை முறியடித்துக்கொண்டு வருகிறது.

ஏற்கனவே கபாலி படத்தின் சாதனையை மூன்றே நாட்களில் முறியடித்த விவேகம், இப்போது வெளியாகி ஒரு வாரத்தை எட்டியுள்ள போதும் அனைத்து திரையரங்கங்களிலும் கூட்டம் குறையாமல் ஓடிக்கொண்டிருப்பதாக திரையரங்கு உரிமையாளர் ஒருவர் மிகவும் சந்தோஷமாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், விவேகம் திரைப்படம் ஒரு வாரத்தைக்கடந்தும்  பல இடங்களில் முதல் நாள் கொண்டாட்டம் போல ரசிகர்கள் ஆரவாரம் செய்து திரைப்படத்தை மிகவும் மகிழ்ச்சியோடு பார்த்து வருகின்றனர்.

மேலும் சென்னையில் உள்ள பிரபல திரையரங்கில் பாகுபலி படத்தை விட அதிகம் வசூல் செய்தது விவேகம் படம் தான் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த தகவலை அறிந்த தல ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகின்றனர்.