பொங்கலுக்கு ஸ்பெஷலாக, அஜித்தின் விஸ்வாசம், ரஜினியின் பேட்ட கடந்த 10 ஆம் தேதி வெளியானது. இரண்டு படங்களுமே பெரிய ஹீரோக்கள்  படம் என்பதால் பாக்ஸ் ஆபிசில் எது முதலிடம் பிடிக்கும் என்ற ஆர்வம் மக்களிடையே இருந்தது. இரண்டு படங்களுக்குமே விமர்சன மற்றும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்தாலும் பேட்ட படத்தைவிட விஸ்வாசம் வசூல் அதிகரித்துள்ளது. கண்கூடாக பார்க்க முடிகிறது.

காரணம் என்னென்ன ? அஜித்துக்கு ஓவர் பில்ட்அப் கிடையாது, அதோடு குடும்பக் கதையில் தேவையான அளவு சென்டிமெண்ட், காதல், ரொமான்ஸ், காமெடி, ஆக்ஷன் என பக்காவாக இருப்பதால் விஸ்வாசம் படத்திற்கு பி மற்றும் சி சென்டர்களில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.   

படம் ரிலீஸ் ஆன நாளே தமிழ் ராக்கர்ஸில் படம் கசிந்த போதிலும் தியேட்டர்களுக்கு செல்பவர்கள் சென்று கொண்டு தான் இருக்கிறார்கள். 
விஸ்வாசம் குடும்பங்கள் கொண்டாடும் படமாக அமைந்துள்ளது. சாதாரண மக்கள் மட்டும் அல்ல பிரபலங்களும் தியேட்டரில் படம் பார்க்கிறார்கள். 

இந்நிலையில் விஸ்வாசம் ரிலீஸான மூன்று நாட்களில் உலக அளவில் ரூ. 100 கோடி வசூல் செய்துள்ளது. சென்னை பாக்ஸ் ஆபீஸில் முதல் முறையாக விஸ்வாசம் நேற்று முன் தினம் ஒரே நாளில் ரூ. 1.04 கோடி வசூல் செய்துள்ளது. படம் வெளியான மூன்று நாட்களில் சென்னையில் மட்டும் ரூ. 2.78 கோடி வசூலித்துள்ளது. படம் வெளியான நாளை விட நேற்று வசூல் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும், அமெரிக்காவில் விஸ்வாசம் ரூ. 1 கோடிக்கு மேல் வசூல் ஆகியுள்ளது. சிங்கப்பூரில் இரண்டு நாட்களில் ரூ. 1.48 கோடி வசூல் செய்துள்ளது. விஸ்வாசம் படம் ஓடும் தியேட்டர்களுக்கு வரும் குடும்பங்களின் எண்ணிக்கை அடுத்தடுத்த காட்சிகளில் அதிகரித்துள்ளது.  ரஜினியின் கோட்டையாக விளங்கிய பி. சி. சென்டர்களை விஸ்வாசம் பிடித்துள்ளது.