ரஜினி படம் வெளியாகிறதென்றால்,  பெரிய நடிகராக இருந்தாலும், வேறு மொழி நடிகராக இருந்தாலும் ரிலீஸ் டேட்டை தள்ளி போட்டுவிட்டு, சைலண்ட்டாக இருப்பார்கள்,  அப்படிப்பட்ட ரஜினிக்கே டஃப் பைட் கொடுக்கும் முடிவோடு அஜித்தின் விஸ்வாசம் பொங்கல் ரேஸில் களமிறங்கினார் சத்யஜோதி பிலிம்ஸ். 

ஆமாம், தில்லாக ரஜினிக்கு எதிராக களத்தில் இறங்கிய விஸ்வாசம் அவர்கள் வைத்திருந்த நம்பிக்கை  அவர்கள் வைத்த நம்பிக்கையை பொய்யாக்கவில்லை, தாறுமாறாக வசூலை அள்ளிக் குவித்து வருகிறது. அவர்கள் ஹேப்பிதான், அவர்கள் எப்போது இரண்டு படமும் ரிலீஸ் தேதியை அறிவித்திட்டார்களோ இன்னும் ஓய்ந்த பாடில்லை, இதோ படம் ரிலீஸ்ஆகியும் தியேட்டரில் சண்டையிட்டு ரத்தம் பார்த்தது வரை சூடு குறையாமல் கொண்டு போய்க் கொண்டிருக்கிறார்கள். 


தூக்குதுரையின் அடாவடி அளப்பறையை பார்க்கவரும் முதியோர் முதல் குட்டீஸ் வரை அனைவரையும் பாசத்தால் கட்டிப்போட்டு விடுகிறார்.   பேட்ட படமும் சும்மா இல்ல, செம்ம கல்லா காட்டுகிறது, என்ன உலக நாடுகளில் அள்ளும் வசூல் அளவிற்கு தமிழகத்தில் இல்லை என்றாலும், ஏதோ அப்படி இப்படியென முதலுக்கு மோசமில்லை என சொல்லும் அளவிற்கு ரசிகர்கள் கூட்டத்தால் தாக்கு பிடிக்கிறது என சொல்லலாம்.

ஒரு பக்கம் ‘பேட்ட’ படம் மூன்று நாளில் 100 கோடி வசூலித்துவிட்டது என்றும், மற்றொரு பக்கம் ‘விஸ்வாசம்’ அதே மூன்று நாளில் 100 கோடி வசூலித்துவிட்டது என்றும் சமூக வலைத்தளங்களில் கடும் சண்டை எழுந்துள்ளது. இப்படி இருக்கையில், அஜித் ரசிகர்கள் ரஜினியின் பேட்ட படம் ஓடு தியேட்டர்களில் கூட்டம் எப்படி இருக்கிறது என போட்டோ எடுத்து போடுகின்றனர். ரஜினி ரசிகர்களும் விடுவதாக இல்லை  டிக்கட் புக்கிங் இணையதளத்தை  ஸ்க்ரீன் ஷாட் எடுத்து போடுகின்றனர்.