vishwaroopam 2 important news
கடந்த 2013 ஆம் ஆண்டு பல பிரச்சனைகளுக்கு இடையே வெளியாகி மிக பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் 'விஸ்வரூபம்'. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும், உலகநாயகன் கமல்ஹாசன் 'விஸ்வரூபம் 2 ' திரைப்படத்தை இயக்கி நடித்து முடித்துள்ளார். ஒரு சில காரணங்களால் இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிபோய்க்கொண்டே இருக்கிறது.
இதனிடையே, அவர் சபாஷ் நாயுடு படத்தில் நடிக்க துவங்கினார். இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடக்க இருந்த நிலையில், அவருக்கு கால் முறிவு ஏற்பட்டு அந்த படத்தில் தொடர்ந்து நடிக்க முடியாமல் போனது.
இந்நிலையில், தற்போது மீண்டும் சபாஷ் நாயுடு படப்பிடிப்பில் கவனம் செலுத்தவுள்ள கமலஹாசன், ஏற்கனவே எடுத்து முடித்துள்ள 'விஸ்வரூபம் 2 ' படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்.
அதனால் விரைவில் இந்த படத்தின், இசை வெளியீட்டு விழா நடத்தவுள்ளதாக நடிகர் கமலஹான் அறிவித்துள்ளார்.
