vishal release letter for cable tv operators

நடிகர் சங்க செயலாளரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால் தமிழகம் முழுவதும் உள்ள கேபிள் டிவி உரிமையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.
அதில் கூறி இருப்பது என்னவென்றால்... கேபிள் டிவியை நம்பியிருக்கும் பல ஆயிரம் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் இடைத்தரகர்கள் இல்லாமல் அச்சமின்றி நேர்மையுடன் சுதந்திரமாக தொழில் செய்யவும் கேபிள் டிவி தொழிலை முறைபடுத்தி வருமானத்தை பெருக்கவும் தயாரிப்பாளர்கள் சங்கள் தீர்மானித்திருக்கிறது.

அதன் முதற்கட்ட நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் உள்ள ஒவ்வொரு கேபிள் டிவி உரிமையாளரையும் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நேரடி தொடர்பில் கொடு வர முடிவெடுக்கப்பட்டிருக்குறது.

இதற்கு தேவையான விண்ணப்ப படிவம் இதர ஆவணங்கள் முற்றும் தங்கள் சேனல் மத சந்தா விபரங்கள் பற்றிய தகவல்கள் அறிய கீழ் கண்ட தொலைபேசி இனங்களில் மட்டும் தொடர்பு கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்வதாக கூறப்பட்டுள்ளது.

விஷால் விடுத்துள்ள கடிதம்..