ரஜினி, சத்யராஜ், சரத்குமார் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் காமெடியனாக நடித்தவர் அல்வா வாசு. இவர் கடந்த சில மாதங்களாக கல்லீரல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டு, அவருடைய சொந்த ஊரான மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

பல மாதங்கள் சிகிச்சை அளித்தும், பலன் இல்லாததால் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு அழைத்துவரப்பட்டார். இவரின்  நிலை அறிந்த நடிகர் சங்க செயலாளர் விஷால் உடனடியாக 20000 பணத்தை அவருடைய அவசர செலவிற்கு அனுப்பிவைத்தார். ஆனால் எதிர்பாராத விதமாக திடீர் என அல்வா வாசு உயிர் இழந்தார்.

இதனைத்தொடர்ந்து அல்வா வாசுவின் குடும்பம் வறுமையில் வாடுவதை  அறிந்த விஷால் அவருடைய தேவி அறக்கட்டளை மூலம், அவருடைய குடும்பத்திற்கு 1 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கியுள்ளார். மேலும் அவருடைய பிள்ளைகளின் படிப்பு செலவையும் தானே ஏற்றுக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார். இதற்கு அல்வா வாசுவின் குடும்பத்தினர் விஷாலுக்கு நன்றி தெரிவித்துள்ளனர். மேலும் நடிகர்சங்கத்தை சேர்ந்த பலர் அல்வா வாசுவின்கு டும்பத்திற்கு உதவ முன்வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.