Asianet News TamilAsianet News Tamil

vishal: 82 வயதில் நடிகராக அறிமுகமாகும் விஷாலின் தந்தை.... ஆக்‌ஷன் கிங் உடன் களமிறங்குகிறார்

தினேஷ் லட்சுமணன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தின் மூலம் நடிகர் விஷாலின் தந்தை  ஜி.கே.ரெட்டி நடிகராக அறிமுகமாக உள்ளார்.

vishal father GK Reddy acting debut in kollywood
Author
Tamil Nadu, First Published Nov 21, 2021, 12:13 PM IST

தமிழ் மற்றும் கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் அர்ஜுன் தற்போது, நடிப்பு, இயக்கம், தயாரிப்பாளர் என்பதை தாண்டி, ஒரு தொகுப்பாளராகவும் களத்தில் இறங்கி கலக்கி வருகிறார். விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இதுதவிர படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார் அர்ஜுன். 

vishal father GK Reddy acting debut in kollywood

சமீபத்தில் லாஸ்லியா, ஹ்யர்பஜன் சிங் நடிப்பில் வெளியான பிரெண்ட்ஷிப் படத்தில் வில்லனாக நடித்திருந்த அவர், தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகும் கிரைம் திரில்லர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தை தினேஷ் லட்சுமணன் இயக்குகிறார். இப்படத்தில் நடிகர் அர்ஜுன் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.

vishal father GK Reddy acting debut in kollywood

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தற்போது முக்கிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்தில் நடிகர் விஷாலின் தந்தை ஜி.கே.ரெட்டியும், நடிகர் கதிரின் தந்தை லோகுவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. அவர்கள் இருவரும் இப்படம் மூலம் நடிகர்களாக அறிமுகமாக உள்ளனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios