நடிகர் சங்க பொது செயலாளரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான நடிகர் விஷாலுக்கும், நடிகை அனிஷா அல்லா ரெட்டிக்கும் கடந்த வாரம் ஹைதராபாத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில், மிக பிரமாண்டமாக திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.

இதில் இருவீட்டாரின் குடும்பத்தினரும், விஷாலின் நெருங்கிய நண்பர்களும், திரை பிரபலங்கள், என குறிப்பிட்ட சிலர் மட்டுமே கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். இந்நிலையில், திருமண நிச்சயதார்த்தம் குறித்த பதிவு ஒன்றை விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Well the pics says it all. #anVShall.anisha s my fiancé.happy and blessed.luv u Anisha. https://t.co/Xv9T5uiuwY pic.twitter.com/tvpW8GdbbB
— Vishal (@VishalKOfficial) March 16, 2019

இதில், இந்த புகைப்படமே அனைத்தையும் சொல்கிறது... அனிஷாவை தன்னுடைய வாழ்க்கையில் வந்ததால் நான் ஆசீர்வதிக்கப்பட்டவன் என பதிவிட்டுள்ளார்.

மேலும் திருமண நிச்சயதார்தத்தின்  போது, அனிஷா கையில் மோதிரம் அணிவித்ததும், விஷால் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு அவரை கட்டி அணைத்த காட்சி ஒன்றையும் விஷால் ரசிகர்கள் வெளியிட்டுள்ளனர் இந்த காட்சி தற்போது வைரலாகி வருகிறது.

#Vishal #Anisha got engaged in Hyderabad today ❤️ #Anisha #Vishal #vishalAnisha #celebritycoupleinsta

A post shared by Celebrity Couple (@celebritycouple.insta) on Mar 16, 2019 at 3:09am PDT