இயக்குநர் எழிலிடம் உதவியாளராக பணியாற்றிய ஆனந்தன் இயக்கத்தில் உருவாகி வரும் சக்ரா படத்தில் விஷால் நடித்து வருகிறார். விஷால் ஃபிலிம் ஃபேக்டரி இத்திரைப்படத்தை தயாரித்து வருகிறது. இந்நிலையில் “சக்ரா” படம் தீபாவளிக்கும் ஓடிடி-யில் வெளியாகும்  என விஷால் தெரிவித்திருந்தார். இந்நிலையில் சக்ரா படத்திற்கு தடை கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

 நடிகர் விஷால் - நடிகை தமன்னா நடிப்பில் வெளியான ஆக்‌ஷன் என்ற படத்தை ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் ரவீந்திரன் தயாரித்திருந்தார். படத்தில் நஷ்டம் ஏற்பட்டால் 8 கோடியே 29 லட்சத்து 57 ஆயிரத்து 468 ரூபாயை திருப்பித்தருவதாக கூறி, ரவீந்திரனுடன் நடிகர் விஷால் உறுதி அளித்து ஒப்பந்தம் செய்துள்ளார். ஆனால் விஷால் வாக்குறுதியை நிறைவேற்றாமல் இழுத்தடித்ததாக கூறப்பட்டது.  மேலும் தங்கள் நிறுவனத்திற்கு ஆனந்தன் கூறிய அதே கதையை தற்போது நடிகர் விஷால் தனது நிறுவனத்திற்கு சக்ரா என்ற பெயரில் எடுத்துள்ளதாகவும், அதனால் அந்த படத்திற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுத்திருந்தனர். 

 

இதையும் படிங்க: அச்சு அசலாக சமந்தா போல் மாறிய அதுல்யா... கவர்ச்சி உடையில் கச்சிதமாக கொடுத்த போஸ்கள்...!

இந்த வழக்கில் கடந்த செப்டம்பர் 24ம் தேதி நடைபெற்ற விசாரணையின் போது, செப் .30-க்குள் இரு தரப்பினரும் பேச்சு நடத்தி சுமூக தீர்வு காண வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டிருந்தார். மேலும் சக்ரா திரைப்படத்தை ஓடிடி-நிறுவனங்களுக்கு விற்பனை செய்யும் நடவடிக்கையை நிறுத்தி வைக்க வேண்டும் என விஷால் தரப்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆனால் அதன் பின்னர் நடந்த விசாரணையின் போது சக்ரா படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்ய விதிக்கப்பட்ட தடையை நீட்டிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. 

 

இதையும் படிங்க: “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் மீண்டும் என்ட்ரியாகும் மீனா... படப்பிடிப்பு எங்கு நடக்கிறது தெரியுமா?

இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஆக்ஷன் படத்தில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்டும் வகையில், 8.29 கோடி ரூபாய்க்கான உத்தரவாதத்தை நடிகர் விஷால் அளிக்க வேண்டும் என்றும், எந்த வகையில் உத்தரவாதம் அளிக்கப் போகிறார் என்பது குறித்தும், அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கை  வரும் அக்டோபர் 9-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.